
கட்சியின் தலைமைத்துவத்திற்கு என்றும் வற்றாத ஆதரவை வழங்குவதில் முழு மூச்சாக களமிறங்கும் ஆர்.மகேந்திரன் மத்திய செயலவைக்கு போட்டியிடுகிறார்
ஈப்போ,ஜூலை 1-
பேராக்
தேசிய ம.இ.கா தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரங்கள் நாடு தழுவியநிலையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் உதவித் தலைவர்கள், மத்திய செயலவை பதவிகளுக்கான போட்டிகளும் சூடு பிடிக்கின்றன.
பேராக் மாநிலத்திலிருந்து 3 வேட்பாளர்கள் மத்திய செயலவை பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர்.
அந்த வகையில் எங்கு சென்றாலும் ம.இ.காவின் பெயருக்கு நற்பெயரை கொண்டு வரும் வகையில் பாரம்பரிய உடையில் வருகை புரிந்து அனைவரின் கவனத்தை ஈர்க்கும் கோப்பேங் ம.இ.கா தொகுதி தலைவர், ஆர்.மகேந்திரன் ம.இ.கா மத்திய செயலவை பதவிக்கு போட்டியிடுகிறார்.
மகேந்திரன் தான் என்றுமே ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் தலைமைத்துவத்திற்கு ஆதரவு வழங்குவதாக மனம் திறந்து கூறினார்.
கட்சியை சிறப்பாக வழிநடத்துவதில் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களுக்கு ஈடு இணை இல்லை. ஒரு தந்தை போல் அவரும் அவருக்கு துணையாக டத்தோஸ்ரீ எம். சரவணன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
ம.இ.கா தேர்தல் வரும் 6ஆம் தேதியன்று நடைபெறுகிறது. அதில் வாக்களிக்கும் பேராளர்கள் மத்திய மத்திய செயலவை பதவிக்கு 26 எண்ணை பிரதிநிதிக்கும் ஆர்.மகேந்திரனுக்கு வாக்களிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



