Malaysia

பிள்ளைகள்‌ தொலை தொடர்பு சாதனங்களை பயன்படுத்தவதை விட விளையாட்டுகளில் ஈடுப்படுத்துங்கள் -பி.யுவராஜ் வலியுறுத்து

ஈப்போ,ஜூலை 1-
இன்றைய நவீன‌காலக் கட்டத்தில் பிள்ளைகள்‌ தொலை தொடர்பு சாதனங்களுடன் அதிக நேரம்‌செலவிடுகின்றனர். குறிப்பாக கைத்தொலைபேசியுடன் எப்பொழுதும்‌ இருக்கின்றனர். அவர்களை விளையாட்டுகளில் ஈடுப்பட செய்யுங்கள்‌ என ஈப்போ கிந்தா சமூகநல, விளையாட்டு, பண்பாட்டு சங்கத்தின்‌ தலைவர், பி.யுவராஜ் தெரிவித்தார்.

கராத்தே, சிலம்பம் உட்பட‌பல விளையாட்டுகள் உள்ளன. அதற்கான‌ பயிற்சிகளை‌ பிள்ளைகள்‌ எடுத்து கொள்வது சிறப்பானதாகும் என தாமான் ரிஷா 1பி கிந்தா மாவட்டமும் ஈப்போ தாமான்‌ ரிஷா குடியிருப்பாளர் சங்கமும் இணைந்து நடத்திய தாய்‌ மற்றும்‌ தந்தையர்‌ தின‌ விழாவில் சிறப்பு வருகை‌ புரிந்த போது அவர்‌ கூறினார்.

தாய்‌ மற்றும் தந்தையர்களுக்கான விழாவை நடத்தும் இந்த நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவிற்கு என்னுடைய‌ பாராட்டுக்கள். அதனுடன், இந்த‌ விழாவை மிக அழகாக முன்‌ நின்று நடத்திய ஜெயபிரகாஷிற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றார்.

இந்த நிகழ்வில் தாய்மார்களுக்கும் தந்தையர்களுக்கு அனிச்சல் வெட்டப்பட்டது. மேலும் குலுக்கு சீட்டு வழி பரிசுகளும் வழங்கப்பட்டன.

தொடர்ந்து , எஸ்.பி‌.எம்.தேர்வில் சிறப்பு தேர்ச்சி‌ பெற்ற மாணவர்களுக்கு சன்மானம்‌ வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட‌ அனைவருக்கும் ஏற்பாட்டுக்‌ குழுத் தலைவர், பி.ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.

இந்த நிகழ்வில் ஈப்போ மாநகரமன்ற‌ அதிகாரி, புவான்‌ ஜெயா சிறப்பு வருகை புரிந்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button