Malaysia

உலக மக்கள்‌‌ மனம் உடல் ஆரோக்கியத்திற்கு அனைத்துலக யோகா தினம் ஜுலை 6 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் பிரம்மாகுமாரி‌‌ செல்வ‌பூபா‌ அழைக்கிறார்

ஈப்போ, ஜூலை 1-
எண் சாண்‌ உடம்புக்கு சிரசே பிரதானம். அது போல் நம்முடைய வாழ்க்கைக்கு உடல் ஆரோக்கியமும் மன‌ ஆரோக்கியமும் முக்கியம். அந்த உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவே உலக யோகா‌ தினம்‌ வரும்‌ ஜூலை 6 ஆம் தேதியன்று ஏற்பாடு‌ செய்யப்பட்டுள்ளதாக மலேசிய‌ பிரம்மாகுமாரி அறவாரியம் ஈப்போ‌‌ கிளையின்‌ பிரம்மாகுமாரி செல்வபூபா தெரிவித்தார்.

ஈப்போ கிந்தா‌ வேளி ரித்திரேட்‌டில் நடைபெறும் மாபெரும்‌ யோகா நிகழ்வு காலை 9 மணிக்கு தொடங்கும்.
ராஜ‌ யோகா வழி‌ மக்களின்‌ மனதை ஒருநிலை‌ப்படுத்தி நாம்‌ உடல் மற்றும் மனம் ஆரோக்கியத்தை பெற‌ முடியும். அதனை‌ முறையாக மக்களுக்கு எடுத்துரைக்க இந்த‌ பயனான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு‌ ஆண்டும் தவறாமல் நடத்தப்படும்‌‌ இந்த யோகா தினத்தில்‌ மக்கள்‌ இந்த வருடமும்‌ கலந்து கொள்ள‌ அழைக்கப்படுகின்றனர்.மக்களின்‌ மன‌வலிமையை‌ அதிகரித்து சவால்களை‌ சந்திக்கும்‌ பக்குவத்தை இலகு ராஜ‌யோகா தியானம் வழங்கும் என‌ அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக தகவல் பெற‌ விரும்புபவர்கள் 010-9331945 அல்லது
011-23386188 என்ற எண்களை‌ தொடர்பு கொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button