
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள பினாங்கு மக்கள் முன்வர வேண்டும் செள கோன் யாவ் கோரிக்கை

பினாங்கு,ஜூலை 1-
பினாங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இலவச தடுப்பூசி திட்டத்தை மலேசிய தேசிய புற்றுநோய் சங்கம் (என்.சி.எஸ்.எம் ) ” யாரையும் கைவிடாமல்” என்ற கருப்பொருளோடு செயல்படுத்தி வருவதால் பினாங்கு மக்கள் முனைப்பு காட்ட வேண்டும் என பினாங்கு முதல்வர் செள கான் யாவ் கேட்டுக் கொண்டார்.
மக்களின் வளம் மற்றும் வாழ்வாதாரத்தை பறை சாற்றும் பினாங்கு2030 தொலை நோக்கத்திற்கு ஏற்றவாறு “யாரையும் கைவிடாமல்”
கருப்பொருளும் அமைகிறது என ஞாயிற்றுக்கிழமை பினாங்கு புக்கிட் தெங்கா எம்.பி.கே.கே மண்டபத்தில் நடைபெற்ற என்.சி.எஸ்.எம். கர்ப்பப்பை எச்.பிவி. தடுப்பூசி திட்டத்தின் தொடக்க நிகழ்வில் அவர் கூறினார்.
இதனிடையே (என்.சி.எஸ்.எம்.) தலைமை நிர்வாக இயக்குனர். பேராசிரியர் டாக்டர் முரளிதரன் முனுசாமி, இந்த அருமையான திட்டத்தை வெற்றியடைய செய்ய பங்காற்றியிருக்கும் பினாங்கு மாநில அரசாங்கத்திற்கு நன்றியை தெரிவித்தார்.
அதனுடன் , 300,000 எச்.பி.வி. தடுப்பூசிகளை வழங்கிய எம்.எஸ்.டி நிறுவனத்திற்கும், 3 மில்லியன் வெள்ளி வழங்கிய மலேசியாவின் ஆயுள் காப்பீட்டு சங்கத்திற்கு முதலமைச்சர் நன்றியை பதிவு செய்தார்.



