IndiaInternationalMalaysia

“இந்தியன் 2” ஊடகவியலாளர்களை மரியாதையோடு நடத்தத் தவறி விட்டனர்? கோடிக்கணக்கில் பணம் போட்டு படம் வாங்கியவருக்கு மேடையில் நாற்காலி இல்லையா?

தேசம் செய்திகள் குணாளன் மணியம்

கோலாலம்பூர்,ஜூன் 29-
*இந்தியன் 2″ திரைப்படத்தை அப்படி இப்படி என்று சொல்லி விளம்பலப்படுத்தியவர்கள் ஊடகவியலாளர்களை மரியாதையோடு நடத்தத் தவறி விட்டதாக ஊடகவியலாளர்கள் மத்தியில் அரசல் புரசலாக பேசப்பட்டு வருவது காதுக்கு எட்டியுள்ளது.

முதல் கட்டமாக ஊடகவியலாளர் சந்திப்பு ஜூன் 28 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என்றும் 2.30 மணிக்கு ஊடகவியலாளர்கள் பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஊடகவியலாளர்கள் சிலர் சரியாக 2.30 மணிக்கு அங்கு சென்று விட்டார்கள். ஆனால் மணி, 3 ஆனது. நான்கு ஆனது. அதன்பிறகு ஊடகவியலாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஊடகவியலாளர்களை காக்க வைத்து சந்திப்பு ரத்து செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டதான் ஊடகவியலாளர்களுக்கு கொடுக்கும் மரியாதையா?

ஊடகவியலாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதற்கு இயற்கை காரணம் என்று கமலஹாசன், சித்தார்த் இருவரும் தெரிவித்து மன்னிப்பு கேட்டது அறிவுக்கு பொருந்தாத ஒன்று என்று ஊடகவியலாளர்கள் சிலர் கருத்துரைத்துள்ளனர்.

புக்கிட் ஜாலில் திரையரங்கில் செய்தியாளர் சந்திப்புக்கு காத்திருந்த ஊடகவியலாளர்களை அங்கிருந்து பிரிக்பீல்ட்ஸ் NU CENRAL போகச் சொல்லி விட்டார்கள். கமலஹாசன், சித்தார்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகிய மூவரும் மாலை 6 மணிக்கு அங்கு வருவார்கள் என்று சொல்லி விட்டார்கள். வேறு வழியின்றி ஊடகவியலாளர்கள் அங்கு சென்று விட்டனர்.
மக்களோடு மக்களாக ஊடகவியலாளர்களை இணைத்ததுதான் ஊடகவியலாளர்களுக்கு வழங்கும் மரியாதையா?

கமலஹாசன், சித்தார்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகிய மூவரும் NU CENTRAL மேடைக்கு மாலை 6 மணிக்கு வருவார்கள் என்று கூறப்பட்ட போதும் வழக்கம் போலவே 7.20 மணிக்கு வந்தார்கள். கிட்டத்த ஒன்றரை மணிநேரம் ஊடகவியலாளர்களையும் மக்களையும் காக்க வைத்ததுதான் அவர்களுக்கு வழங்கும் மரியாதையா?

இந்த நிகழ்ச்சிக்கு அறிவிப்பாளராக இருந்த கோகுல் நன்றாக பேசி மக்களை கலகலப்பாக இருக்கச் செய்தார். ஆனால், ரேவதி சுதப்பி விட்டார். பேசத் தெரியாமல் பேசினார். அவருக்கு பதில் வேறு நல்ல அறிவிப்பாளரை போட்டிருக்கலாம். பேசத் தெரியாதவர் அறிவிப்பாளராக இருப்பது ஆச்சரியம்தான்.

இந்த NU CENRRAL பகுதியில் பாதுகாப்பு என்ற போர்வையில் பவுண்சர்கள் செய்த அட்டுழியம் தாங்க முடியவில்லை. கமலஹாசன், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா ஆகிய மூவரும் எந்த சலனமும் இல்லாமல்தான் வருகிறார்கள். ஆனால், பவுண்சர்கள் செய்த அலப்பறை தாங்க முடியவில்லை.

இதில் லட்சணத்தில் ரேலாகாரர்கள் வேறு சேர்ந்து கொண்டனர். அதிகாரத்தை கையில் வைத்து ஊடகவியலாளர்களை விரட்டினர். தடுத்தனர். ஆனால், மேடை பகுதி முன்புறத்தில் சம்பந்தமில்லாதவர்கள் நின்று வீடியோ எடுத்தனர்.

ஆனால், தகவல் தொடர்பு அமைச்சில் பதிவு செய்து ஊடக அட்டையை வைத்திருந்தவர்களும் தடுக்கப்பட்டது வேதனைக்குரியது. இதுதான் ஊடகவியலாளர்களுக்கு வழங்கும் மரியாதையா?

தமிழ்நாட்டில் இடையில் ஒரு சம்பவம். பிரபல நடிகர் நாகரஜுன் விமான நிலையத்தில் வெளியே வரும் போது உடல்பேறு குறைந்தவர் அவரை அணுகிய போது அவரது மெய்காவலர் அவரை பிடித்து தள்ளி விடுகிறார்.

நிலை தடுமாறி கீழே விழ முற்பட்ட அவரை சிலர் தாங்கிப் பிடிக்கின்றனர். இந்த சம்பவத்தை கவனித்த நாகர்ஜுன் ஒன்றும் நடக்காதது போல் இருக்கிறார்.

அவருடன் வரும் தனுஷ் மற்றும் அவரது மகனும் திரும்பி திரும்பி பார்க்கின்றனர். ஆனால், ஒன்றும் செய்யவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் மறுநாள் நாகஜுன் காணொலி ஒன்றின் மூலம் மன்னிப்பு கேட்கிறார். அப்போது ஏன் மெய்க்காவலரை கண்டிக்கவில்லை? ஆமாம், நீங்கள் நடிகர் உங்கள் புத்தி அப்படிதான். உங்கள் மெய்க்காவலரின் புத்தியும் அப்படித்தான் இருக்கும்.

உங்களை போன்றவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். யார் பூனைக்கு மணி கட்டுவது?

இந்த “இந்தியன் 2” திரைப்படத்தை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கிய மலேசியருக்கு மேடையில் நாற்காலி இல்லை. மேடைக்கு கீழே அமர்ந்திருந்தவர் அறிவிப்பாளர்கள் பெயரை அழைத்த பிறகு சில விநாடிகள் பேசி விட்டு மீண்டும் கீழே வந்து அமர்ந்து விட்டார்.

அவருக்கு என்று மேடையில் ஒரு நாற்காலி இல்லை? இதுதான் அவருக்கும் தரும் மரியாதையா? கமலஹாசன் அவருக்கு நாற்காலி போட வேண்டாம் என்று சொல்லி விட்டாரா?

இந்த நடிகர்கள் மட்டுமல்ல; மேடை ஏறும் ஒவ்வொரு நடிகரும் நடிகையும் சொல்வது ஒன்றுதான். “உங்களால் நாங்கள் இந்த மேடையில் இருக்கிறோம்” என்று சொல்லி ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் சொல்கிறார்கள். நடிகர்கள் அல்லவா? சொல்லியா கொடுக்க வேண்டும்?

ஊடகவியலாளர்களை சந்திக்க இயற்கை இடம்தரவில்லையா? இயற்கை என்றால் மழை. மழை வந்ததாக தெரியவில்லை. அதிகாலையில் வந்து விட்டார்கள். வெள்ளிக்கிழமை அதிகாலை வந்து விட்டார்கள். ஏன் வரவில்லை? உங்கள் படத்தை ஊடகவியாளர்கள்தான் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கிறார்கள் என்பதை மறுந்து விட்டீர்களா?

ஊடகவியலாளர் சந்திப்பு நடக்காததற்கு வேறு காரணம். அதை சொன்னால் பிரச்சினை என்று அப்படியே மலுப்பி விட்டார்கள். இவர்கள் நடத்தும் நாடகம் நமக்கு தெரியாதா என்ன? விக்ரம் திரைப்பட அறிமுக விழாவிலும் இப்படித்தான் நடந்தது. ஊடகவியலாளர்களை மதிக்கத் தெரியாத நீங்கள் ஏன் ஊடகவியலாளர்களை அழைக்கிறீர்கள்?

ஒரு நடிகர் என்றால் ராகவா லோரன்ஸ் போல் பண்பாக இருக்க வேண்டும். பண்பு, அன்பு என்றால் நடிகர் ராகவா லோரன்ஸ்தான். மக்கள் மத்தியில் மெய்க்காவலர் இல்லாமல் வரும் ஒரே நடிகர். ஒரு ரசிகனை கட்டுப்படுத்தும் சக்தி நடிகனிடம் உண்டு. அது ராகவா லோரன்ஸுக்கு தெரிகிறது. ஆனால், கமலஹாசன், சித்தார்த் மற்றும் எஸ்.ஜே.சூரியாவுக்கு தெரியவில்லை.

உங்களையும் உங்கள் “இந்தியன் 2” திரைப்படத்தையும் ஊடகவியலாளர்கள் மற்றும் மக்கள் புறக்கணித்து பாடம் கற்பிக்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button