
மலேசியாவுக்கு மீண்டும் வருகிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பணத்தை சம்பாதித்து சம்பாதித்து எங்குதான் கொண்டு போகப் போகிறார்கள்? உங்களால் மக்களுக்கு நிதியுதவி வழங்க முடியுமா?
தேசம் அதிரடி அலசல் குணாளன் மணியம்
கோலாலம்பூர்,ஜூலை 3-
பணத்தை சம்பாதித்து சம்பாதித்து எங்குதான் கொண்டு போகப் போகிறார்கள் எனும் கேள்வி சிலவற்றை பார்க்கும் போது எழவே செய்கிறது.
மலேசியாவுக்கு மீண்டும் வருகிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் எனும் செய்தியை கேட்டவுடன் பலருக்கு மகிழ்ச்சி; ஆனால், சமூக கடப்பாடு கொண்ட சிலருக்கு அதிருப்தி.
மலேசியாவில் இசைநிகழ்ச்சி நடத்த வரும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லட்சக்கணக்கில் பணம் வழங்கப்படுகிறது. ஆனால், அவருக்கு ஆதரவு தரும் ரசிகர்களான
மக்களுக்கு என்ன கிடைக்கும் என்பதுதான் கேள்வி?
இந்த இசை நிகழ்ச்சிக்காக லட்சக்கணக்கில் பணம் பெறும் ஏ.ஆர்.ரஹ்மான் அந்த பணத்தை தமிழ்ப்பள்ளிக்கு நிதியாக வழங்குவாரா? கண்டிப்பாக செய்ய மாட்டார். பிறகு நாம் ஏன் இசைநிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்க வேண்டும்?
இந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசைநிகழ்ச்சியின் வழி யார் யாரெல்லாம் ஆதாயம் பெறுவார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். இசைநிகழ்ச்சியை நடத்த மலேசியாவைதான் தேர்வு செய்கிறார்கள். மலேசியாவில் பணம் என்ன கொட்டியா கிடக்கிறது என்று கேட்கவே தோன்றுகிறது.
கடந்த காலங்களில் எத்தனையோ இசைநிகழ்ச்சிகள் நடந்துள்ளது. அதன் ஏற்பாட்டாளர்கள் சமூக கடப்பாட்டோடு செயல்பட்டார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. இப்படிபட்ட நல்ல மனம் படைத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
மலேசியாவில் இசைநிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என்று சொல்லவில்லை. சமூக உணர்வோடு செய்யுங்கள் என்றுதான் கேட்கிறோம். இந்த ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியின் வழி மலேசிய இந்தியர்களுக்கு என்ன பயன்? இந்தியர்களின் ஆதரவு வேண்டும். ஆனால், இந்தியர்கள் நலனுக்காக எதையும் செய்ய மாட்டார்கள். இதற்காக சில விதிமுறைகளை அரசு முன்னேடுக்க வேண்டும்.
இதில் முக்கியமாக இசைநிகழ்ச்சி நடத்த வரும் இசை பிரபலங்கள் மலேசியர்களின் நலனுக்காக சில CSR உதவி திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை கொண்டு வர வேண்டும். மேலும் வசதி குறைந்தவர்களுக்கு உதவி வழங்க வேண்டும்.
மலேசியாவிற்கு பலமுறை கலைநிகழ்ச்சி படைக்க வந்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு முறையாவது மலேசிய மாற்றுத்திறனாளி, வசதி குறைந்த மக்களுக்கு உதவி வழங்கியிருப்பாரா? கண்டிப்பாக இல்லை.
இந்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்? இசைநிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்
இதனை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்ற விதிமுறையை அமலுக்கு கொண்டு வர வேண்டும். இதை இப்படியே விட்டால் ஒரு தரப்பினர் மட்டுமே ஆதாயம் பெறுவார்கள் என்பது திண்ணம்.
நாம் யாருக்கும் எதிர் கிடையாது. ஆனால், சமுதாய நலனில் அக்கறை கொண்டு இந்த செய்தியை வெளியிடுகிறோம். இந்த இசைநிகழ்ச்சிக்கு நாம் ஓகே சொல்லி விட்டால் எல்லாமே தலைகீழாக நடக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
ஏ.ஆர்.ரஹ்மான் கெடுபிடியாக வருவார். அவரிடம் நெருங்க்கூட விடமாட்டார்கள். மேடையில் ஏறி Hello Malaysia என்று ஒரிரு வார்த்தைகள் பேசுவார். மக்களோடு மக்களாக ஊடகவியலாளர்களை சந்திப்பார். அதிலும் அறிவிப்பாளர் முன்கூட்டியே கேள்விகள் அதிகம் வேண்டாம் என்று சொல்லிவிடுவார். பிறகு ஏன் ஊடகவியலாளர்களை அழைக்கிறீர்கள்?
இது நமக்கு தேவைதானா? மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும்.



