
இணைய பகடிவதை விவகாரம் வெள்ளிக்கிழமை அமைச்சரவையில் விவாதிக்கப்படும் ஃபஹ்மி ஃபட்சில் தகவல்
கோலாலம்பூர்,ஜூலை 8-
நாட்டில் இணைய பகடிவதை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சரவையில் விவாதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக தகவம் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
இணைய பகடிவதை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதால் இணைய பகடிவதை விவகாரம் வரும் வெள்ளிக்கிழமை அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என்று அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
புதிய சட்டம் அமலாக்க அம்சங்களை உள்ளடக்கிய சிறந்த தீர்வைக் கண்டறிவதற்கான அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று ஃபஹ்மி ஃபட்சில் தமது முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தார்.
இணைய பகடிவதைக்கு ஆளாகி மரணமடைந்த ஈஷா என்ற ராஜேஸ்வரியின் குடும்பத்தாரை ஃபஹ்மி ஃபட்சில் சந்தித்து ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்த்து.



