
இந்திய சமுதாயத்தின் தேவைகளை பூர்த்தி செய்வேன் பிரதமர் அன்வார் உறுதி
தம்பூன்,ஜூலை 8-
இந்திய சமுதாயத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.
எனக்கு ஆதரவு வழங்கிய இந்திய சமுதாயத்தை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன். எனக்கு ஆதரவு வழங்கி நாடாளுமன்ற உறுப்பினராகவும் பிரதமராகவும் கொண்டு செய்த தம்பூன் இந்திய சமூகத்திற்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாக அன்வார் தெரிவித்தார்.
என் மீது இந்திய சமுதாயத்திற்கு அதிருப்தி இருந்தால் அது குறித்து தெரிவியுங்கள். ஆனால், அதற்காக கோபப்பட வேண்டாம் என்று டத்தோஶ்ரீ அன்வார் சொன்னார்.
உங்களுக்கு அதிருப்திகள் இருந்தால் குறைகளை எடுத்து கூறுங்கள். அதற்காக கோபப்பட்டு பேச வேண்டாம் என்று
தம்பூன் இந்திய சமூதாயத்துடனான சந்திப்பில் அன்வார் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்திய சமுதாயத்திற்கு மித்ரா. தெக்குன், அமானா இக்தியார், பேங்க் ரக்யாட் போன்றவற்றின் வாயிலாக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.

மேலும் அரசாங்கத்தின் அனைத்து உதவித் திட்டங்கள் மூலம் இந்திய சமுதாயம் பலனடைந்து வருகிறது.
எஸ்பிஎம் தேர்வில் 10ஏ அல்லது அதற்கும் மேலாக எடுதேதி அல்லது எடுக்கும் மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பு வழங்கப்படும் என்று அன்வார் உறுதியளித்துள்ளார்.
அரசாங்கம் இந்திய சமுதாயத்தின் தேவைகளை தொடர்ந்து பூர்த்தி செய்தி வரும் நிலையில் இந்த விவகாரங்களை அரசியலாக்கும் சில தரப்பினரை அரசாங்கம் பொருட்படுத்தாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மேலும் சொன்னார்.



