
ஜார்ஜ் டவுன், ஜூலை 26 – 2027 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரவுள்ள புதிய பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளை மலேசியக் கல்வி அமைச்சு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இப்புதிய பாடத்திட்டம் முதற்கட்டமாக தொடக்கப்பள்ளி முதலாம் ஆண்டு மாணவர்களையும் இடைநிலைப்பள்ளி முதலாம் படிவ மாணவர்களை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்படவுள்ளது. நாட்டின் கல்வித் துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள Rancangan Pendidikan Malaysia (RPM) 2026–2035, எதிர்காலக் கல்வியின் பயணத்திற்கான வழிகாட்டியாக அமையும் என கல்வி அமைச்சர் FADLINA SIDEK தெரிவித்தார். அனைத்து நிலைகளிலும் தேவையான ஆயத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், மாணவர்களின் திறன், அறிவு மற்றும் ஆளுமை வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் கல்விச் சீர்திருத்தப் பயணம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றார். இதனிடையே, செபராங் பிறை தெற்கு மாவட்டத்தில் நடைபெற்ற Program TEKAD KPM நிகழ்ச்சியில் கல்வி அமைச்சுக்கும் பொதுமக்களுக்கும் இடையே பாலமாக அமைந்ததாக Fadhlina தெரிவித்தார்.



