
Malaysia
நாட்டின் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அக்டோபர் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் ஃபஹ்மி பாட்சில் தகவல்
கோலாலம்பூர்,ஜூலை 12-
இந்நாட்டின் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வரும் நிலையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பட்ஜெட்டை அக்டோபர் 18ஆம் தேதி தாக்கல் செய்வார் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் கூறினார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் அக்டோபர் 14ஆம் தேதி தொடங்குகிறது. அக்கூட்டத் தொடரில் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அக்டோபர் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.



