Malaysia

கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் நீதிமன்ற உத்தரவுபடி செயல்படுகிறது இந்திய சமுதாயத்திற்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் வெள்ளி நிதியுதவி!!! கல்வி, மருத்துவ உதவியாக தற்போது வரை 84,691 வெள்ளி வழங்கப்பட்டுள்ளது தேவஸ்தான தலைவர் தான்ஶ்ரீ ஆர்.நடராஜா தகவல்

தேசம் செய்திகள் குணாளன் மணியம்,
ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

பத்துமலை, ஜூலை 12-
கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானம் அதன் நிதியை
ஆலய பூஜைகள், திருப்பணிகள் ஆகிய தெய்வ காரியங்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு இருந்தாலும் சமூக கடப்பட்டின் அடிப்படையில் தேவஸ்தனம் உதவிகளை செய்து வருவதாக தேவஸ்தான தலைவர் தான்ஸ்ரீ ஆர்.நடராஜா கூறினார்.

ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தான் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் வெள்ளியை சமூக சேவைகளுக்காக வழங்கி வருகிறது. அந்த வகையில் இவ்வாண்டு தற்போது வரையில் 84 ஆயிரத்து 691 வெள்ளி சமூக நிதி வழங்கப்பட்டுள்ளதாக பத்துமலை திருத்தலத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான்ஸ்ரீ ஆர்.நடராஜா அவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் குறித்து சிலர் பல்வேறு குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளித்து வருகிறார்கள். பக்தர்கள் வசூல் பணத்தை பெற்றுக் கொண்டு இந்திய சமுதாயத்திற்கு எதையும் செய்யவில்லை என்று குற்றச்சாட்டுகிறார்கள்.
ஆனால், ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் செயல்படுகிறது என்பதை
அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று தான்ஸ்ரீ நடராஜா சொன்னார்.

தேவஸ்தானம் 2024 இதுவரை 84,691 வெள்ளி நிதியுதவியாக வழங்கியுள்ளது. உயர் கல்வி பயிலும் மாணவர்கள், சிறுநீரக சுத்திகரிப்பு உட்பட மருத்துவ சிகிச்சை பெறுபவர்களுக்கு இந்த நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக
தான்ஶ்ரீ நடராஜா குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button