Malaysia

கின்றாரா தமிழ்ப்பள்ளி விவகாரம் பொறுப்பில் உள்ளவர்கள் என்ன செய்கிறார்கள்? டத்தோ நெல்சன் கேள்வி

கோலாலம்பூர்,ஜூலை 12-
கின்றாரா தமிழ்ப்பள்ளி விவகாரம் தொடர்பில் பொறுப்பில் உள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் என்று ம.இ.கா தேசிய உதவித் தலைவர் செனட்டர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த கின்றாரா தமிழ்ப்பள்ளி விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும் என்றால் பொறுப்பில் உள்ளவர்கள் செயல்பட வேண்டும். இதற்கு
பொறுப்பில் இருப்பவர்கள்தான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமே தவிர ம.இ.கா அல்ல டத்தோ நெல்சன் கூறினார்.

எனினும் இந்த கின்றாரா தமிழ்பள்ளி பிரச்சினை குறித்து மஇகாதான் முதலில் கேள்வி எழுப்பியது.
ஆனால், தற்போது அந்த விவகாரத்தில் பொறுப்பில் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலையிட்டுள்ளனர்.
அவர்கள் நினைத்தால் இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண முடியும் என்று டத்தோ நெல்சன் தெரிவித்தார்.

நாங்கள்அங்கு சென்று பத்தோடு பதினொன்றாக ஆர்பாட்டம் செய்ய விரும்பவில்லை.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டாலும் மஇகாதான் செய்தது என்று யாரும் சொல்லவும் மாட்டார்கள் என்று டத்தோ நெல்சன் தெளிவுபடுத்தினார்.

இணைய பகடிவதைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட ஈசா விவகாரம் வேதனையளிக்கிறது.
நாம் மாறவில்லை என்றால் பகடிவதையை ஒழிக்க முடியாது.
பகடிவதையில் யாரும் சிக்கக் கூடாது என்று வலியுறுத்தி மஇகாவே பல விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்ட போதிலும் பெற்றோர்கள், பிள்ளைகள் இன்னும் அலட்சியமாக இருக்கின்றனர் என்று டத்தோ நெல்சன் சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button