
Malaysia
எச்ஆர்டி கோர்ப் தொடர்பான எம்ஏசிசி விசாரணை டத்தோ ஷாகுல் இடைக்கால விடுமுறையில் செல்கிறார்
கோலாலம்பூர்,ஜூலை 18-
எச்ஆர்டி கோர்ப் தொடர்பான தேசிய கணக்காய்வாளர் அறிக்கை, பொதுக் கணக்கு குழுவின் அறிக்கை ஆகியவை தொடர்பாக எம்ஏசிசி விசாரணைக்கு வழிவிடும் பொருட்டு இடைக்கால விடுமுறையில் செல்வதாக
எச்ஆர்டி கோர்ப் தலைமை இயக்குநர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் அறிவித்துள்ளார்.
இந்த விடுமுறை ஜூலை 19ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
எச்ஆர்டி கோர்ப்பிற்கான சிறந்த சேவையை வழங்கியுள்ளேன். சிறந்த சேவையை வழங்கவும் நான் உறுதியாக உள்ளேன்.
நான் விடுமுறையில் இருந்தாலும் எச்ஆர்டி கோர்ப் வழக்கம்போல் இயங்கும். எந்த ஒரு பணியிலும் சேவையிலும் தடங்கல் இருக்காது என்று டத்தோ வீரா ஷாகுல் ஹமீத் தாவூத் கூறினார்.
எச்ஆர்டி கோர்ப் தொடர்பான எம்ஏசிசி விசாரணைக்கு வழிவிடும் வகையில்
தாமாகவே முன்வந்து விடுமுறைக்கு செல்வதாக டத்தோ வீரா ஷாகுல் ஹமீத் தாவூத் தெரிவித்தார்.



