Malaysia

குருபூர்ணிமா விழாவில் எஸ்.பி.எம்‌‌ மாணவர்களுக்கு அங்கீகாரம்‌ வழங்கிய கமலம்‌ அம்மையார்

ஈப்போ,ஜூலை 22-
கல்வியில் வெற்றி‌ பெறும் மாணவர்களை தட்டி கொடுப்பதிலும் , மாணவர்களுக்கு நன்னெறிகளை போதிப்பதிலும் முக்கியத்துவம் வழங்கி வரும் சுங்கை சிப்புட் சத்ய சாய்பாபா மையம் அண்மையில் குருபூர்ணிமா விழாவை சிறப்பாக நடத்தினர்.

அம்மையத்தை வழி நடத்தி வரும் கமலம்‌ பனிகர் அம்மையார் அவ்விழாவை மிக அழகாக‌ நேர்த்தியுடன்‌‌ நடத்தினார்.

எஸ்.பி.எம்‌ தேர்வில்‌ சிறப்பு தேரச்சி பெற்ற‌ மாணவர்களுக்கு அங்கீகாரம்‌ வழங்கப்பட்டது.
சுங்கை சிப்புட்டில் அமைந்துள்ள தமிழ்ப்பளளி மாணவர்கள் அருமையாக தங்களுடைய படைப்பினை முன் வைத்தனர்.

அவர்களுக்கும் அம்மையார பரிசளித்து உற்சாக மூட்டினார்.
இதனிடையே .‌மாணவர்களுக்கு நன்னெறி பண்புகளை தொடர்ந்து சத்ய சாய்பாபா மையம் வழி புகட்டுவதாக கமலம் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button