Malaysia

யூனிதார் பல்கலைக்கழக இந்திய மாணவர்களிடையே நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் யூனிதார் கால்பந்து கிளப்பின் புட்சால் போட்டி 80 இந்திய மாணவர்கள் பங்கேற்றனர்

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்

கோலாலம்பூர்,ஜூலை 22-
யூனிதார் பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவர்களிடையே நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் யூனிதார் கால்பந்து கிளப்பின் புட்சால் போட்டி நடத்தப்பட்டது.

யூனிதார் கால்பந்து கிளப்பில் தலைவர் ரிஷிரூபன் பூபாலன், ஞானவேலன் சிவசங்கரன் தலைமையில் நடத்தப்பட்ட இப்போட்டியில்
80 இந்திய மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தினர்.

இந்த யூனிதார் கால்பந்து கிளப்பின் புட்சால் போட்டியில்
மஇகா புத்ரா பிரிவின் துணை செயலாளர் பூர்வின் ரவிச்சந்திரன், மஇகா புத்ரா கூட்டரசுப் பிரதேசத் தலைவர் முகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினர்.

மஇகா புத்ரா பிரிவு பல்கலைக்கழகங்களின் பயிலும் மாணவர்களை ஒன்றிணைப்பதுடன் அவர்களுக்கு உரிய வழிக்காட்டல்களை வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வேளையில்
மஇகா தேசியத் தலைவர் தான்ஶ்ரீ ச. விக்னேஸ்வரன் இளைஞர்களை மேம்படுத்துவதில் முயற்சிகள் மேற்கொண்டு வருவது பல மாணவர்களுக்கு பயனளித்துள்ளது.
தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களின் தலைமைத்துவம் தூரநோக்கு சிந்தனையுடன் செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது.
இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இளைஞர் சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் வழங்கி வருவது பாராட்டுக்குரியது. இந்த வேளையில் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாக பூர்வின் ரவிச்சந்திரன் மேலும் சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button