
இணையப் பகடிவதை பிரச்சனையைக் கையாள நான்கு அமைச்சுகளுடன் சிறப்புக்குழு ஃபஹ்மி பட்சில் தகவல்
கோலாலம்பூர்,ஜூலை 19-
இணையபகடிவதைக்கு தீர்வு காணும் முயற்சியாக தகவல் தொடர்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், இலக்கவியல் அமைச்சகம் மற்றும் பிரதமத் துறையின் சட்ட மற்றும் கழகச் சீர்திருத்த அமைச்சு ஆகிய அமைச்சுக்கள் அடங்கிய சிறப்புக் குழு ஒன்றை அமைக்க அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளதாக
தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் கூறினார்.
இந்த சிறப்புக் குழுவிற்கு மலேசியத் தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம், அரச மலேசியக் காவல்படை மற்றும் சட்டத்துறை ஆகிய மூன்றும் ஆதரவளிக்கும் என்று இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகஒற்றுமை அரசாங்கத்தின் தொடர்பாளருமான ஃபஹ்மி தெரிவித்தார்.
இந்நாட்டில் இணையப் பகடிவதை தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்க இந்த சிறப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இணையப் பகடிவதை பிரச்சினைகளில் சமூக ஊடக தளங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சரவை கருதுவதாக ஃபஹ்மி சொன்னார்.
இணையப் பகடிவதை பிரச்சனைகளைக் கூட்டாகக் கையாள்வதில் மற்ற அமைச்சுகளின் ஒத்துழைப்பை தாங்கள் வரவேற்பதாக ஒற்றுமை அரசாங்கத்தின் தொடர்பாளருமான ஃபஹ்மி கூறினார்.
இதில் சமூக ஊடக நிறுவனர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
இணையப் பகடிவதை பிரச்சனையைக் கையாள சட்டங்களில் திருத்தங்கள் அவசியம் என்றும் ஃபஹ்மி பட்சில் குறிப்பிட்டுள்ளார்.



