
வழிபாட்டுத்தளங்களுக்கு இதுவரை 425,000 வெள்ளி நிதியுதவி துணையமைச்சர் சம்பளமும் வழங்கி விட்டேன் டத்தோ ரமணன் தகவல்
சுங்கைப்பூலோ,ஜூலை 26-
வழிபாட்டுத்தளங்களுக்கு துணையமைச்சர் சம்பளம் உட்பட
இதுவரை 425,000 வெள்ளி நிதியுதவி வழங்கி விட்டதாக தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.
நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் தனது சம்பளத்தை வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கும் தமது வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக சுங்கைப்பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான
டத்தோ ரமணன் தெரிவித்தார்.
நான் கடந்தாண்டு தொடங்கி எனது நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளம் மற்றும் அலவன்சை வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்க முன்வந்த நிலையில்
இதுவரை 452,000 வெள்ளி வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கி விட்டதாக டத்தோ ரமணன் சொன்னார்.
இந்நிலையில் கடந்தாண்டு 72 வழிபாட்டுத் தளங்களுக்கு மொத்தம் 332,000 வெள்ளி வழங்கப்பட்ட நிலையில்
இந்த ஆண்டு துணையமைச்சர் சம்பளத்தையும் சேர்த்து கடந்த ஜனவரி மாதம் முதல் வழிபாட்டுத் தலங்களுக்கு நிதியுதவி வழங்கினேன். கடந்த 7 மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 100 வழிபாட்டுத் தலங்களுக்கு 153,000 ரிங்கிட் நிதியாக வழங்கப்பட்டது. இது தொடரும் என்று டத்தோ ரமணன் மேலும் சொன்னார்.



