Malaysia

ம.இ.கா, ம.சீ.ச ஆகிய இரு கட்சிகளுக்கும் முக்கியத்துவம் வழங்கி வருகிறோம் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி உறுதி

கோலாலம்பூர்,ஜூலை 27-
ம.இ.கா மற்றும் ம.சீ.ச ஆகிய இரு கட்சிகளுக்கும் தாம் முக்கியத்துவம் வழங்கி வருவதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

ஒற்றுமை அரசாங்கத்தில் தேசிய முன்னணி இடம்பெற்றிருந்தாலும் ம.சீ.சவுக்கும் ம.இகாவுக்கும் அமைச்சரவையில் ஒரு துணையமைச்சர் பதவி கூட வழங்கப்படவில்லை என்பது பலரது ஆதங்கம். ஆனால், அமைச்சரவை நியமனங்கள் யாவும் பிரதமரின் முடிவை பொறுத்த விஷயமாகும் என்று ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

ம.இ.காவுக்கும் ம.சீ.சவுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விரு கட்சிகளும் ஓரங்கட்டப்படவில்லை.
தேசிய முன்னணியில் உள்ள இரு கட்சிகளும் ஓரங்கட்டப்படுவதாக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த சில தலைவர்கள் குறை கூறி வருகின்றனர். இதில் எந்த உண்மையும் இல்லை
என்று தேசிய முன்னணி தலைவருமான டத்தோஶ்ரீ ஜாஹிட் ஹமிடி சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button