
அமரர் துன் வி.தி சம்பந்தன் ஒரு பொக்கிசம் ஆரம்ப தமிழ்ப்பள்ளி மாணவர்களிடத்தில் துன் சம்பந்தன் நூல் அறிமுகம்
தேசம் செய்திகள் சாரா
சுங்கை சிப்புட், ஜுலை-27-
மறைந்த அமரர் துன் வி.தி.சம்பந்தன்
இந்திய சமுதாயத்தின் ஒரு
பொக்கிசமாக கருதப்படுகிறார்.
அவரின்
அரிய சேவைகளை
ஆரம்பப் தமிழ்ப்பள்ளி
மாணவர்களிடத்தில் தெரிவிக்க அவரின் அருமை
பெருமைகளை சித்தரிக்கும் நூல்களை ஆரம்பப்
தமிழிப்பள்ளி மாணவ செல்வங்களிடம்
சேர்க்க வேண்டும் என்று சிம்மோர் பட்டணம் அருகே செயல்ப்படும் சிம்மோர் மெட்டல் நிறுவனர் வாசு சின்னப்பன் தனது
எதிர்ப்பார்ப்பை தெரிவித்தார்.
இன்றைய இந்திய இளைஞ்ர்கள் அவர் நாட்டிற்க்கு செய்த பல அரிய சேவைகளை
அறிந்து வைத்திருக்கவில்லை என்பது வருத்தத்தை தருகின்றது என
இங்குள்ள தேசிய வகை ஈ வூட் தமிழ்ப்பள்ளியில்
ஏற்பாடு செய்யப்பட்ட ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான ஒன்பதின்ம காற்ப்பந்து போட்டியை தொடக்கி வைத்து பேசுகையில் மேற்க்கண்ட எதிர்ப்பார்ப்பை
முன் வைத்தார்.
அமரர் துன் வி.தி.சம்பந்தன் நமது பொக்கிசமாவார்.
அவரை நாம் ஒரு போதும் மறக்கலாகாது.
அவர் மறைந்தாலும்
அவரின் அறிய சேவை மனதில்.பதித்து வைத்திருக்க வேண்டும் என்றார்.
துன் சம்பந்தன் கிண்ண காற்ப்பந்து போட்டி ஏற்பாட்டாளர் மணிமாறன் கிருஸ்ணன் பேசுகையில் அமரர் துன் வி.தி.சம்பந்தனின்
சேவைகள்.கொண்ட நூல் இன்றளவு
வினியோகிக்கப்பட்டு வருவதாக சொன்னார்.
துன் விதி சம்பந்தன் சமூக நல.பொது சங்கத் தலைவர் சேகரன் கிருஸ்ணன் மற்றும்
தேசிய வகை மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.சிவராஜ் ஆகிய
இருவர் இந்த காற்ப்பந்து போட்டி வெற்றி பெற ஒத்துழைப்பு வழங்கினர்.
முன்னதாக உரையாற்றிய சுங்கை சிப்புட் இளைஞர் மன்றத் தலைவர் அரிப் ஜாக்கி சுல்கிப்ளி
பேசும் போது நம்.நாட்டின் அருமை பெருமைகளை அறியாத சிலர் நம்.நாட்டில் கிடைக்கும் வசதிகளை.மற்ற
நாடுகளுடன் ஒப்பிட்டு ஏளனம் செய்யும்.செயல் கண்டிக்கத்தக்கது
என்றதோடு நம் நாட்டிற்க்கு விசுவாசமாக இருக்க வேண்டுமாறு கேட்டு கொண்டார்.



