
சமூகவலைத்தளங்கலால் இந்திய மாணவர்களின் கல்வி பாதிக்கிறது ம.இ.கா மகளிர் அணி தலைவி சரஸ்வதி நல்லதம்பி வேதனை
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர் ஜூலை 27-
ஈஷா என்ற ராஜேஸ்வரி தற்கொலை போல் இன்னோரு சம்பவம் நிகழக்கூடாது என்றால் இணைய பகடிவதைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று ம.இ.கா தேசிய மகளிர் அணி தலைவர் மாண்புமிகு சரஸ்வதி நல்லதம்பி கூறினார்.
நாட்டில் இணைய பகடிவதைக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதில் ம இகா தேசிய மகளிர் அணி உறுதியாக உள்ளது.
அந்த வகையில் இணைய பகடிவதைக்கு கடுமையான தண்டனை விதிக்க கோரி மேலவையில் செனட்டர் டத்தோ நெல்சன் வலியுறுத்த கோரி ம.இ.கா மகளிர் அணி மகஜர் வழங்கும் என்று என்று சரஸ்வதி தெரிவித்தார்.
தற்போது நாட்டில் டிக்டோக்கால் இந்திய மாணவர்களின் கல்வி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இது பெரும் வேதனையை அளிக்கிறது என்று ம.இ.கா மகளிர் அணியின் உச்சமன்ற கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின் ஊடகவியலாளர்களிடம் சரஸ்வதி அவ்வாறு சொன்னார்.
ம.இ.கா தேசிய மகளிர் அணி சமூக பணிகளை மேற்கொண்டு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. நியமனம் செய்யப்பட்ட மாநில ம.இ.கா மகளிர் அணி பொறுப்பாளர்கள் தத்தம் கடமைகளை சரிவர செய்வார்கள் என்று சரஸ்வதி குறிப்பிட்டுள்ளார்.



