Malaysia

12 வயதுச் சிறுவன் கார் ஓட்டியச் சம்பவம்- தொடர்பில் தந்தையிடம் போலீஸ் வாக்குமூலம் பதிவு

புத்ராஜெயா, ஜூலை 31 –
12 வயதே நிரம்பிய
சிறுவன் தன் இரு சகோதரர்களை காரில் ஏற்றிக் கொண்டு
பயணித்தச் சம்பவம் தொடர்பில் அச்சிறுவனின் தந்தையிடம் போலீசார்
வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக
சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான்
கமாருள் அஸ்ரான் வான் யூசுப் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு
எட்டு மணியளவில்
அந்த பன்னிரண்டு வயதுச் சிறுவன் ஆறு மற்றும் நான்கு வயதுடைய தன் இரு
சகோதரர்களுடன் பெரேடுவா வீவா காரில் அந்த குடியிருப்பு பகுதியை
வலம் வந்தது தொடக்க க் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக
கமாருள் அஸ்ரான் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச்
சட்டத்தின் 39(1)வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு
வருவதாகவும் இந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள்
மாவட்ட போலீஸ் நிலையத்தைத் தொடர் கொள்ளுமாறு கமாருள் அஸ்ரான் கேட்டுக்
கொண்டார்.

இந்த சம்பவத்தை அக்குடியிருப்பைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தடுத்து
நிறுத்தியதைச் சித்தரிக்கும் 1 நிமிடம் 49 விநாடி காணொளி சமூக
ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டதை தொடர்ந்து இது அம்பலமானது என்பது குறிப்பிடத்தக்கது..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button