
ஆடி மாத முலைப்பாரி திருவிழா ஆகஸ்ட் 11இல் விமரிசையாக நடைப்பெறும் பக்தர்கள் கலந்து கொள்ள ஷர்மிளா தேவி அம்மா அழைக்கிறார்
பெஸ்தாரி ஜெயா,ஆக.3-
ஆடி மாதம் என்றால் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதில் ஐயமில்லை. மலேசியாவில் பல ஆலயங்களில் ஆடி மாத திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் பெஸ்தாரி ஜெயா, கம்போங் சுங்கை டாரா, ஜாலான் ரவாங்கில் அமைந்திருக்கும் அருள்மிகு ஶ்ரீ ருத்ர வீரகாளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத முலைப்பாரி திருவிழா வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி மிகவும் விமர்ச்சையாக நடைபெறவுள்ளதாக அருள்மிகு ஶ்ரீ ருத்ர வீரகாளியம்மன் ஆலயத்தின் தலைவி, அருள்வாக்கு அம்மா ஷர்மிளா தேவி கூறினார்.
இந்தத் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று ஆலயத்தின் கொடியேற்றம் நடைபெறுகிறது. பெண்கள் முலைப்பாரிகளை சுமந்து ஆலயத்தை சுற்றி இடுவார்கள். அதற்காக பெண்கள் சைவம் இருந்து பத்தியமாக முலைப்பாரிகளை இடுவது முக்கியம் என்று அருள்வாக்கு அம்மா ஷர்மிளா தேவி தெரிவித்தார்.
முலைப்பாரிகளை ஏந்தி செல்வதும் அதனை கரைப்பது ஆகமமாகும்.
அதை தொடர்ந்து திருவிழா அன்று அம்மனுக்கு திருவிழா உற்சவம். அந்த நாளில் காலை 9 மணிக்கு ஆலயம் சுற்றி இடப்பட்ட முலைப்பாரிகளை பெண்கள்ஆற்றங்கரையில் கரைப்பார்கள். அதனையடுத்து அவர்கள் தீச்சட்டி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
கிராம வழிப்பாடு மரபோடு இந்த திருவிழா நடைப்பெறும். இதில் அனைவரும் கலந்து கொள்ள அழைக்கிறோம். இந்த திருவிழாவில் பக்தர்கள் அருள்மிகு ருத்ர வீரகாளியம்மன் ஆசிர்வாத்தை பெறுங்கள் என்று அருள்வாக்கு அம்மா ஷர்மிளா தேவி கேட்டுக் கொண்டார்.
அருள்மிகு ருத்ர வீரகாளியம்மன் உங்களை ஆசிர்வாதிப்பார் என்ற நம்பிக்கையோடு
வாருங்கள். அன்னையின் அருளை பெறுங்கள் என்று அருள்வாக்கு அம்மா ஷர்மிளா தேவி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தஆலயத்தின் திருவிழா குறித்த மேல்விவரங்களுக்கு கீழ்க்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
அம்மா- 011-51120053 அல்லது 011-11605523



