
சமூக ஊடக தளங்கள் ஆகஸ்டு மாதம் தொடங்கி உரிமம் பெற வேண்டும் உரிமம் இல்லாத சமூக ஊடகங்களுக்கு சிறை, அபராதம் விதிக்கப்படலாம் அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் எச்சரிக்கை
கோலாலம்பூர்:, ஆக.2-
சமூக ஊடக தளங்களுக்கு உரிமம் பெறுவதற்கான நடைமுறை ஆகஸ்ட் மாதம் தொடங்கி அமலுக்கு வரும் நிலையில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் இது முழுமையாக கட்டாயமாக்கப்படும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் கூறினார்.
அந்த வகையில் தகவல் தொடர்பு பல்லூடக சட்டம் 1998, உரிமம் பெறாத தளங்களை மூடுவதற்கு அரசாங்கத்தை அனுமதிக்கும் விதிகளைக் கொண்டுள்ளது. மேலும்
பல்லூடக தொடர்பு சட்டத்தின் 126ஆவது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்று அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்
இந்த சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சமூக ஊடக நடத்துநருக்கு 500,000 வெள்ளி அல்லது ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் அபராதம் விதிக்கப்படலாம் என்று அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் சொன்னார்
ஆகையால் , சமூக ஊடகங்கள் MCMCயிடம் உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறாத சமூக ஊடக தளங்களுக்கு சிறை, அபராதம் விதிக்கப்படலாம் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் குறிப்பிட்டுள்ளா



