
இலங்கை கிழக்கு மாகாணத்தில் திருவள்ளுவர் சிலையில் டத்தோஸ்ரீ எம். சரவணன் பெயரை பதித்து அவரையே சிலை திறக்க வைத்த செந்தில் தொண்டமான்
மட்டகளப்பு ஆக.2-
இலங்கை கிழக்கு மாகாண அரசின் ஏற்பாட்டில் உலகத் தமிழ் கலை இலக்கிய மாநாடு மட்டக்களப்பில் நடைப்பெற்று வரும் நிலையில் .இங்கு நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையில் செந்தமிழ்ச் செல்வர்
டத்தோ ஸ்ரீ எம் சரவணன் பெயரை பதித்து அவரையே சிலையை திறக்கச் செய்து கௌரவித்துள்ளார் ஆளுநர் செந்தில் தொண்டமான்.
அந்தச் சிலையில் டத்தோஸ்ரீ சரவணன் பெயரைப் பதித்து அவருக்கு இலங்கை கிழக்கு மாகாண அரசு கௌரவிக்கு செய்துள்ளது. இதில் கலந்து கொள்ள ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சொல்வேந்தர், செந்தமிழ்ச் செல்வர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் சிறப்பு விருந்தினராக இலங்கை சென்றுள்ளார்.
இலங்கை கிழக்கு மாகாண அரசின் ஏற்பாட்டில் உலகத் தமிழ் கலை இலக்கிய மாநாடு மட்டக்களப்பு பகுதியில் இரண்டு நாட்கள் நடைப்பெற்று வரும் வேளையில் இங்கு திருவள்ளுவர் சிலை நிறுவப்கட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் முதல் நாள் பல வீதி ஊர்வல கண்காட்சிகளுடன் தொடக்க விழா மிகவும் கோலாகலமாக நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில், கலை, பண்பாடுகளைச் சித்தரிக்கும் வகையில் பல ஊர்திகள் வடிவமைக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன அதோடு பல வேடங்களிட்ட கலைஞர்கள் தங்களின் படைப்பையும் வெளிப்படுத்தி வந்தனர்.
தமிழர் பாரம்பரிய நடனத்துடன்,கலைஞர்களின் ஊர்வலத்தோடு டத்தோ ஸ்ரீ எம் சரவணனின் வரவேற்பு அமைத்திருந்தது. இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் எதிர்கொண்டு டத்தோ ஸ்ரீ எம். சரவணனை வரவேற்றார்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு மட்டகளப்பு பகுதியின் பிரதான சாலையில் நிறுவப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையைச் செந்தமிழ்ச் செல்வர் டத்தோஸ்ரீ எம். சரவணன் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில்
முக்கியத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



