Malaysia

கோல பேராக் தோட்டம், பாகான் டத்தோ, பேராக் கோதண்ட இராமர் ஆலயத்தில் இராம நவமி பண்டிகை மிகவும் சிறப்பாக நடந்தேறியது மலேசிய தெலுங்கு அறவாரியம் ஏற்பாட்டில் ஒரு நாள் இராம நவமி பூஜை மிகவும் நடைபெற்றது

கோல பேராக், ஏப்.18-
தென்கிழக்காசியாவில் பெரிய ஆலயமாக கருதப்படும் 21ஆவது மைல், கோல பேராக் தோட்டம், பாகான் டத்தோ, பேராக்கில் உள்ள கோதண்ட இராமர் ஆலயத்தில் இராம நவமி பண்டிகை மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த இராம நவமி பண்டிகை ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 19ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் மிகவும் சிறப்பாக நடைபெற்று வரும் வேளையில் மலேசிய தெலுங்கு அறவாரியம் ஏற்பாட்டில் ஒரு நாள் இராம நவமி பூஜை மிகவும் சிறப்பாக நடந்தேறியது.

இந்த இராம நவமி பூஜையை தொடர்ந்து காலையில் ஆலயத்தில் ஒமம், அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. அதன் பிறகு மாலையில் பஜன், சுவாமி ஊர்வலம் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மலேசிய தெலுங்கு அறவாரியத்தின் தலைவர் டத்தோ காந்தராவ் மற்றும் அறவாரியத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த இராம நவமி பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இந்திய பாரம்பரிய முறையில் வாழை இலையில் அறுசுவையுடன் அன்னதானம் வழங்கப்பட்டதாக மலேசிய தெலுங்கு அறவாரியத்தின் தலைவர் டத்தோ காந்தராவ் தெரிவித்தார்.

தென்கிழக்காசியாவில் மிகப்பெரிய ஆலயமாக கருதப்படும் இந்த கோல பேராக் தோட்டம், பாகான் டத்தோ, பேராக் கோதண்ட இராமர் ஆலயத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வரையில் நடைபெறும் இந்த இராம நவமி பண்டிகையில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி டத்தோ காந்தராவ் கேட்டுக் கொண்டார்.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button