
ஈப்போ ஷித்தோக்காய் ருயு கராத்தே கிளாப்பின் கராத்தே போட்டியில் 200 விளையாட்டாளர்கள் பங்கேற்பு
ஈப்போ,டிச.24-
ஈப்போ டூ ஷித்தோக்காய் ருயு கராத்தே கிளாப்பு தொடங்கி 10 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கராத்தே போட்டி நேற்று சிறப்பாக நடைபெற அதில் 200 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
ஈப்போ ஷித்தோக்காய் ருயு கராத்தே கிளாப்பின் பயிற்சியாளர், அருணாசலம் ரெங்கசாமி ஏற்பாட்டில் இதர மாநிலங்களிலிருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியை ஜெலாப்பாங் சட்டமன்ற உறுப்பினர் சியா பாவ் ஹியான் தொடக்கி வைத்தார்.
மேலும், பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பனர் வ.சிவகுமார் ஆதரவில் கராத்தே போட்டி இனிதே நடைபெற்றது.
இந்த போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் ஈப்போ கிந்தா சமூகநல, விளையாட்டு, பண்பாட்டு சங்கத்தின் தலைவர், பி.யுவராஜன், புந்தோங் காவல் நிலையத்தின் தலைவர் இன்ஸ்பேக்டர் கணேசன், ஏ.எஸ்.பி.ராஜன், வழக்கிறிஞர் லோகப்பிரியன், சிஹான் கணேசன், முன்னாள் காற்பந்து விளையாட்டாளர் செல்வராஜூ, ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.
இப்போட்டி வெற்றிக்கரமாக நடைபெற உதவி புரிந்த அனைவருக்கு நன்றி என அருணாசலம் கூறினார்.



