
ம.இ.கா போட்டியிட்ட அதன் தொகுதிகளில் ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்கும் தான்ஶ்ரீ விக்னேஸ்வரன் தகவல்
ஜார்ஜ்டவுன்,ஆக.12-
நாட்டின் 15ஆவது தேர்தலில் போட்டியிட்ட அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் மஇகா ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்கும் என்று ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கூறினார்.
அதேநேரத்தில் அதிகமான இந்திய வாக்காளர்களைக் கொண்ட நாடாளுமன்ற இடங்களிலும் மஇகா ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்கும் என்று பினாங்கு மாநில ம.இ.கா பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் 16ஆவது தேர்தலில் தேசிய முன்னணி தொடர்ந்து நம்பிக்கை கூட்டணியை ஆதரிக்கும் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி கூறியிருந்தார்.
அக்கூட்டணி வெற்றி பெற்ற தொகுதிகளில் தேசிய முன்னணி போட்டியிடாது என டத்தோஶ்ரீ ஜாஹிடி ஹமிடி கூறியிருந்தார்.
தேசியக் கூட்டணி உறுப்பு கட்சி என்ற முறையில் ம.இ.கா அவருக்கு முழு ஆதரவை வழங்கும் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.
பினாங்கு ம.இ.காவின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் முன்னிலையில் தான்ஶ்ரீ ச. விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
தேசிய முன்னணியின் உறுப்பு கட்சிகளான மஇகா மற்றும் மசீசவுடன் கலந்தாலோசிக்காமல் ஜாஹிட் ஹமிடி பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



