Malaysia

பத்தாங் பெர்ஜூந்தை, சுங்கை டாரா கல்லுக்குழி ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய திருப்பணி செப்டம்பர் 8ஆம் தேதி கும்பாபிஷேகம் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ சரவணன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர் ஆலய தலைவர் ராமகணேசன் தகவல்

பத்தாங் பெர்ஜூந்தை,ஆக.16-
சுமார் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த
பத்தாங் பெர்ஜூந்தை ஸ்டார்த்மோர் கல்லுக்குழி
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் திருப்பணி செப்டம்பர் 8ஆம் தேதி காலை 11 மணிதொடங்கி 12.30 மணிக்குள் அரசியல் தலைவர்கள், சமயத்தலைவர்கள் முன்னிலையில் மிகவும் கோலாகலமாக நடைபெறவிருப்பதாக ஆலயத் தலைவர் திரு.ராமகணேசன் கூறினார்.

இந்த ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் திருப்பணி வேலைகள் பூர்த்தி கட்டம் கட்டமாக பூர்த்தி செய்யப்பட்டு தற்போது இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தலைவர்களுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டு வருவதாக ராமகணேசன் தெரிவித்தார்.

இந்த பத்தாங் பெர்ஜூந்தை ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் 130 ஆண்டுகள் வரலாற்றை கொண்ட ஆலயமாகும். அந்த காலத்தில் தோட்ட மக்களால் நிறுவப்பட்ட இந்த ஆலயம் காலங்காலமாக பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஆலயம் கும்பாபிஷேகம் காண தயாராகி வருவதாக ராமகணேசன் சொன்னார்.

இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் செப்டம்பர் 8ஆம் தேதி நடைபெறும் நிலையில் இறுதிகட்ட வேலைகளுக்கு மத்தியில் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில். ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், ம.இ.காவின் முன்னாள் தலைவர் தான்ஸ்ரீ சுப்ரமணியம், Gula Perak டத்தோ மற்றும் அரசியல், அரசியல் சாராத தலைவர்கள் கலந்து கொள்ளவிருப்பதாக ராமகணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆலயம் கடந்த மூன்று ஆண்டுகளாக திருப்பணி கண்டு வருகிறது. தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஒரு லட்சம் வெள்ளி வழங்கியிருந்தார். டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஒரு லட்சம் வெள்ளி வழங்கினார். தான்ஸ்ரீ சுப்ரமணியம் ஒரு லட்சம் வெள்ளியும் வழங்கினார். Gula Perak மற்றும் இதர தலைவர்கள் வழங்கிய பணத்தை கொண்டு 20 லட்சம் வெள்ளி செலவில் கோவில் திருப்பணி செய்யப்பட்டுள்ளதாக ராமகணேசன் கூறினார்.

இந்த கோவில் திருப்பணியை திருப்பணிக் குழுச் செயலாளர் தென்னரசு, நிர்வாக குழுவினர் அனைவரும் திருப்பணி சிறப்பாக நடைபெற பாடுபட்டு வருகின்றனர். என்றார் ராமகணேசன்.

ஆடி மாதத்தை முன்னிட்டு ஆலயத்தில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்துள்ளது. சுற்றுவட்டார மக்கள் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாடு செய்கின்றனர். ஆலய திருப்பணிக்கு பொதுமக்களும் நிதியுதவி வழங்கியுள்ளதாக ராமகணேசன் தெரிவித்தார்

பத்தாங் பெர்ஜூந்தை சுற்று வட்டாரத்தை சேர்ந்த தோட்டப் பாட்டாளிகளுக்கு முக்கிய ஆலயமாக கருதப்படும் இந்த கோவில் ஒரு தாய்க் கோவிலாக விளங்கி வருகிறது என்பதால் அனைவரும் தொடர்ந்து நிதி வழங்கி ஆதரவு தருவதுடன் செம்படம்பர் 8ஆம் தேதி நடைபெறும் கும்பாபிஷகத்தில் கலந்து கொள்ளும்படி ராமகணேசன் அழைப்பு விடுத்திள்ளார்.
ஆலயத்திற்கு நன்கொடை வழங்க விரும்பும் பக்தர்கள் திரையில் காணும் வங்கி கணக்கு எண் அல்லது கைப்பேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button