
மீண்டும் நட்பின் வாசத்தை நுகர்ந்த கிடோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள்
ஈப்போ, ஜூன் 20-
நாம் வாழ்ந்த வாழ்க்கையில் நமக்காக நாம் வாழ்வது நட்பில்தான் உள்ளது. ஆனால், அந்த நட்பை எத்தனை பேர் மதிக்கிறார்கள் என்பது தெரியாத ஒன்று. அந்த வகையில்பாகான் செராய், கிடோங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 57 ஆண்டுகளுக்கு பின்னர் ஈப்போ மாநகரத்தில் ஒன்று திரண்டு நட்பிற்கு மகுடம் சூட்டினர்.
அண்மையில் முன்னாள் மாணவர், ஆர்.மூர்த்தி தலைமையில் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் ஆர்.பக்தா ,ஆர்.குப்புசாமி,பி.மகேஸ்வரி, ஆர்.சேகர்,என்.முனியாண்டி, வி.பஞ்சாசரம், பி.லோகிதாசன், எம். வேலாயுதம்,எஸ்.நீலாவதி, எஸ்.சோலை, பி.சுந்தரம், பி.தனலட்சுமி ஆகியோர்கலந்து கொண்டனர்.

இந்த முன்னாள் மாணவர்கள் நண்பேண்டா 1957 வாட்சாப் குழுமம் வழி நட்பினை மேம்படுத்தி வருகின்றனர்.
இவர்களில் சில முன்னாள் இந்த உலகை விட்டு மறைந்தாலும் அனைவரின் மனதில் இன்னும் வாழ்ந்து வருவதாக மூர்த்தி கூறினர்.
இன்னும் எத்தனை தோட்டத்து பள்ளி முன்னாள்மாணவர்கள் இவர்களை போல் நண்பர்களை நினைக்கின்றனர்.



