Malaysia

சுக்மா 10000 மீட்டர் நெடுந் தூர பிரிவில் வெள்ளி மாநிலத்தை பிரதிநிக்கும் முகமட் பாருக்

ஈப்போ,ஆக.17-
பேராக்
சிரமமான குடும்ப சூழ்நிலை ஒரு போதும் வாழ்க்கையில் சாதனை‌ படைக்க‌ தடையாக அமையாது‌ மாறாக ஈப்போ கருடா ஒட்டப்பந்தைய மன்றம் போன்ற‌ நல்ல மன்றங்கள் இருந்தால் யார்‌ வேண்டுனாலும் ஓட்டப்பந்தையத்தில் வெற்றி‌அடையலாம் என‌ 2024 சுக்மா போட்டியில் பங்கேற்கவிருக்கும் முகமட் பாருக் முகமட்‌ சுபீர் கான்‌ தெரிவித்துள்ளார்.

வெறும் 18 வயது நிரம்பிய‌ அவர் 10 வயதில் தான் பேசவே தொடங்கியுள்ளார். தற்பொழுது சென்.மைக்கல் இடைநிலைப்பள்ளியில் பயின்று வருகிறார்.

எனினும் இன்று காலால் வேகமாக 10000 மீட்டர் தூர‌ ஓட்டம் மூலம்‌ அதிகம்‌ பேசுகிறார். ஈப்போ கருடா ஓட்டப்பந்தைய‌ மன்றத்தின் தலைவரும் பயிற்சியாளரான‌ வி.
கிருஷ்ணன்‌ பிரதியேகமாக முகமட் பாருக்கிற்கு பயிற்சியளித்து வருகிறார்.

தம்மிடம்‌ தாமதமாக பயிற்சிக்கு பாருக் வந்தாலும் அவர் ஓட்டப்பந்தைய நேரம்‌ சிறப்பாக உள்ளது என கிருஷ்ணன் கூறினார்.

அண்மையில் மலேசிய தேசிய‌ திடல்தளப் போட்டியில் 10000 மீட்டர்‌ பிரிவில் அவருக்கு 2-ஆம்‌ இடத்தை அடைந்தார். ஆகஸ்ட் 17 ஆம்‌ தேதி சரவாக்கில் தொடங்கும் சுக்மாவில்‌ பாருக் தங்கம் வெல்ல தேசம்‌ ஊடகம் வாழ்த்துகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button