Malaysia

ம.இ.காவில் மீண்டும் டத்தோ சிவராஜ்? மஇகா மத்திய செயலவை முடிவு செய்யும் டான்ஶ்ரீ ச. விக்னேஸ்வரன் அறிவிப்பு

 

ஜொகூர்பாரு,ஆக.20-
மஇகாவின் முன்னாள் உதவித் தலைவர்களில் ஒருவரான டத்தோ சிவராஜ் மீண்டும் கட்சியில் இணைவதற்கு விண்ணப்பம் செய்துள்ளதால
அவரின் விண்ணப்பத்தை மஇகா மத்திய செயலவை பரிசீலித்து உரிய முடிவை எடுக்கும் என்று ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

மஇகாவின் முன்னாள் உதவித் தலைவர்களில் ஒருவரான டத்தோ சிவராஜ் கடந்தாண்டு கட்சி பொறுப்புகளில் இருந்து விலகினார். அவரே முன்வந்து கட்சியில் இணைய நினைப்பதால் அவரை இணைத்துக் கொள்வது தொடர்பில் மத்திய செயலவை முடிவு செய்யும் என்று
ஜொகூர் மாநில மஇகா மாநாட்டை தொடக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் அவ்வாறு தெரிவித்தார்.

ஜொகூர் மாநில மஇகா மாநாட்டில் அதிகமான பேராளர்கள் கலந்து கொண்டது இங்கு கட்சி இன்னும் வலுவாக உள்ளது என்பதை நிரூபித்துள்ளது.

இந்நிலை தொடர வேண்டும். ஜொகூர் மாநிலத்தில் சட்டமன்றங்களைத் தவிர்த்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மஇகா வெற்றி பெற வேண்டும்.

இதற்கான நடவடிக்கைகளை ஜொகூர் மாநில மஇகா மேற்கொள்ள வேண்டும் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button