
ஈஷா விவகாரத்தில் எனது கடமையை மட்டுமே செய்கிறேன் எனக்கு நன்றி கூற வேண்டாம் அமைச்சர் ஃபஹ்மி பட்சில் வலியுறுத்து
ஈஷா விவகாரத்தில் எனது கடமையை மட்டுமே செய்கிறேன்
எனக்கு நன்றி கூற வேண்டாம்
அமைச்சர் ஃபஹ்மி பட்சில் வலியுறுத்து
புத்ராஜெயா,ஆக.20-
ஈஷா விவகாரத்தில் நான் எனது கடமையை மட்டுமே செய்கிறேன் என்பதால் இதற்காக எனக்கு யாரும் நன்றி கூற வேண்டாம் என்று .
தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
ஈஷாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். நானும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்.
இந்த விவகாரத்தில் எனது கடமையை மட்டுமே நான் செய்கிறேன் என்று புத்ராஜெயாவில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து செய்தியை வழங்கிய போது அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் அவ்வாறு தெரிவித்தார்.
இணைய பகடிவதைக்கு இலக்கான ஈஷா தற்கொலை செய்து கொண்டார். இதனால் மரணமடைந்த ஈஷாவின் வீட்டிற்கு சென்றேன். அவரது தாயாரை சந்தித்து ஆறுதல் கூறினேன். ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஞசென்று ஈஷாவின் தாயாரை சந்தித்து உதவிகளை வழங்கியதாக அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் சொன்னார்.
நாட்டில் இணையப் பகடிவதைக்கு பலியாகும் கடைசி நபராக இஷா இருக்க வேண்டும் என்று .
அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் சூளுரைத்துள்ளார்.



