Malaysia

முதலை குட்டை அருள்மிகு தேவ முனீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்திர திருவிழா ஆகஸ்ட்‌ 31 ஆம்‌ தேதியன்று நடைபெறுகிறது

 

கோப்பிங்,ஆக.22-
கோப்பிங் சாலையை கடந்து செல்பவர்கள் நிச்சயமாக முதலை குட்டை‌ அருள்மிகு தேவ‌ முனீஸ்வரர்‌ ஆலயத்தை பார்க்காமல் செல்ல மாட்டார்கள். தேவ முனீஸ்வரர்‌ ஆலயத்தின்‌ வருடாந்திர‌ திருவிழா வரும் 31 ஆகஸ்ட் தேதியன்று நடைபெறுகிறது.

இந்த திருவிழாவை முன்னிட்டு காலையில் 7 மணிக்கு பால் குடம் நேரத்திக்கடன் தொடங்கும் என‌ அருள்மிகு தேவ‌‌ முனீஸ்வரர்‌ ஆலயத் தலைவர், தங்கராஜூ தெரிவித்தார்.

பின்னர், முனீஸ்வரருக்கு அபிஷேகம், சிறப்பு‌ பூஜை நடைபெறுவதால் பக்தர்கள் கலந்து கொள்ளலாம்.

கடந்த ஆகஸ்ட் 18 ஆம்‌ தேதியன்று ஆலயத்தின் கொடியேற்றம் , உபயங்கள்‌தொடங்கவுள்ளன.

தேவ‌‌ முனீஸ்வரரின் ஆசிர்வாதத்தை‌ பெறுங்கள். உங்களுடை கஷ்டங்கள் விலகும் என அவர் கூறினார்.

இந்த‌ஆலயத்திற்கு நாடு‌ தழுவிய‌ நிலையில் மக்கள்‌ வந்த வண்ணமாக உள்ளனர்.‌‌
முதலை குட்டை‌ அருள்மிகு தேவ முனீஸ்வரர்‌ ஆலயத்திற்கு ஆதரவு வழங்க விரும்புவர்கள் 0840129000001844 Bank Simpanan Nasional – Persatuan Penganut Dewa Muniswarar என்ற வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம். தொடர்புக்கு
017-5330588 (தங்கராஜூ)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button