Malaysia

பேராக் மாநிலத்தில் இந்தியர்கள் மத்தியில் மாற்றத்தை காண விரும்புகிறேன் முதலாவது பேராக் ம.இ.காவின் கூட்டத்தில் தான்ஸ்ரீ ராமசாமி வேண்டுகோள்

 

ஈப்போ,ஆக.23-
பேராக்கில் உள்ள நமது இந்திய சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆற்றல்மிக்க குழுவை வழிநடத்துவது ஒரு ஆழமான அனுபவமாக இருந்ததாக ம.இ.கா தேசிய பொருளாளரும் பேராக் மாநில தலைவருமான தான்ஸ்ரீ எம்.ராமசாமி கூறினார்.

இந்த சந்திப்பானது பல்வேறு விவாதங்கள், கலந்துரையாடல், திட்டமிடல் மற்றும் கூட்டு முடிவெடுத்தல் ஆகியவற்றின் கலவையாக இருந்தது. மாநில ம.இ.கா கட்சி உறுப்பினர்களின் ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கு நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். மேலும் நாம் செல்லும் தலைமைத்துவ வழியை கண்டு உற்சாகமாக இருப்பதாக அண்மையில் பேராக் ம.இ.கா தலைவர் என்ற முறையில் முதல் மாநில ம.இ.கா கூட்டத்திற்கு தலைமை தாங்கிய போது தான்ஸ்ரீ ராமசாமி அவ்வாறு தெரிவித்தார்.

இந்த மாநில கூட்டத்தில் பங்கேற்று தங்கள் நேரத்தையும் நல்ல யோசனைகளையும் முன்வைத்ம அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். நமது பணியைத் தொடரவும், கட்சியிலும் நமது சமூகத்திலும் அர்த்தமுள்ள தாக்கங்களை ஏற்படுத்தவும் ஆவலுடன் காத்திருப்பதாக தான்ஸ்ரீ ராமசாமி மேலும் சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button