Malaysia

செர்டாங் மருத்துவமனை ஸ்ரீ மகா சிவகாளியம்மன் ஆலயத் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது செப்டம்பர் 2இல் நடைபெறும் அமாவாசை பூஜையில் கலந்து கொள்ள ஆலய குருக்கள் சிவஸ்ரீ சிவா குருக்கள் அழைப்பு விடுத்தார்

செர்டாங்,ஆக.31-
காஜாங்-பூச்சோங் நெடுஞ்சாலை 6ஆவது மைல் செர்டாங் மருத்துவமனை அருகில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா சிவகாளியம்மன் ஆலயத்தின் 36ஆம் ஆண்டு திருவிழா அண்மையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்டு 14ஆம் தேதி கொடியேற்ற வைபவத்துடன் திருவிழா தொடங்கியது. அன்றைய தினம் தொடங்கி ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இந்நிலையில் திருவிழா அன்று காலை தொடங்கி பல்வேறு பூஜை, புனஸ்காரங்கள் நடைபெற்றது. அதன் பிறகு ஆயிரம் பால்குடங்கள், தீச்சட்டி, புறப்பாடு நடைபெற்றது. நண்பகலில் அம்பாலுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு அம்பாள் ராஜலங்காரத்துடன. காட்சி தந்தாள்.

அதன்பிறகு மாலையில் பல்வேறு பூஜைகளுக்குப் பிறகு அம்பாள் அலங்காரத்துடன் ஆலய உள்வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மறுநாள் மஞ்சள் நீராட்டு நடைபெற்றது. பின்னர் அம்பாள் பொன்னுஞ்சல் நடைபெற்றது.

செர்டாங் மருத்துவமனை ஸ்ரீ மகா சிவகாளியம்மன் ஆலயத்தில் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற பக்தர்கள்தான் முக்கிய காரணம். இந்த வேளையில் நன்கொடை வழங்கிய பக்தர்கள் அனைவருக்கும் ஆலய நிர்வாகம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

திருவிழாவின் போது ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு ஹோமம், பூஜைகள், அபிஷகேம் ஆராதனைகளுக்கு பக்தர்கள் நன்கொடை வழங்கியுள்ளனர்.

இந்த திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெற உதவி நல்கிய பக்தர்கள் அனைவரும் ஆலயத்தில் நடைபெறும் மாதாந்திர அமாவாசை பூஜையில் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர்.
இந்த அமாவாசை பூஜை செப்டம்பர் 2ஆம் தேதி ஆலயத்தில் இரவு நடைபெறும். இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி ஆலய குருக்கள் சிவஸ்ரீ சிவா குருக்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

செர்டாங் சிவகாளியம்மன் ஆலயம் பக்தர்கள் மத்தியில் நன்கு பிரசித்துப் பெற்ற ஆலயமாகும் என்பதால் ஆலயத்தின் அனைத்து விழாக்களிலும் பக்தர்கள் கலந்து கொள்ள சிவஸ்ரீ சிவானந்தன் சிவாச்சாரியார் அழைப்பு விடுத்துள்ளார். தொடர்புக்கு 016-3707877

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button