
பேராக் மாநில எம்.எஸ்.எஸ்.பி.கே. 2024 ஆம் ஆண்டு போட்டியில் களமிறங்கும் கருடா ஓட்டப்பந்தைய மன்றத்தின் போட்டியாளர்கள்
ஈப்போ, ஆக.31-
பேராக் மாநில MSSPK எம்.எஸ்.எஸ்.பி.கே 2024 போட்டி வரும் செப்டம்பர் 2ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி நடைபெறுகிறது.
அதில் ஈப்போ கருடா ஓட்டப்பந்தைய சங்கத்தின் போட்டியாளர்கள் 8 பேர் வட கிந்தாவை பிரதிநிதிக்கின்றனர் என ஈப்போ கருடா மன்றத்தின் தலைவர், வி.கிருஷணன் கூறினார்.
இந்த போட்டியாளர்கள் நெடுந்தூர ஓட்டம் , தடையோட்டம், உயரம் தாண்டுதல் , நடைப் போட்டி ஆகிய போட்டிகளில பங்கேற்கவுள்ளனர்.
அவர்களுக்கான பயிற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்கள் வெற்றி வாகை சூடுவார்கள் என நம்பிக்கையுண்டு என அவர் தெரிவித்தார்.
இதில் பங்கேற்கும் முகமட் பாருக் முகமட் சுபைர் கனான் அண்மையில் சுக்மா போட்டியிலும் வெள்ளி, வெண்கலம் பதக்கங்களை பெற்றார்.
அதனுடன், கடந்த வாரம் பேராக் விளையாடாடு அரங்கத்தில் நடைபெற்ற பள்ளிகளுக்கான மாற்றுத் திறனாளி ஓட்டப்பந்தைய போட்டியில் கருடா மன்றத்தை சேர்ந்த கிரிதரன் கார்த்திக் 3 தங்கம் பதக்கங்களை வென்றார்.



