
மூன்று ஆலயங்களுக்கு பேராக் அரசு நிலம் வழங்கியது.
ஈப்போ, ஆக.30-
பேராக் மாநிலத்தில் மேலும் 3 ஆலயங்களுக்கு மாநில அரசு நிலம் வழங்கியுள்ளது. கடந்த மாதம் பேராக்கில் 600 க்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன. இவைகள் போதுமானது என்று கருத்துரைத்தேன். அதற்கு மாற்று கருத்தாக ஒரு நபர் காணெளி வாயிலாக எனக்கு ஆலயத்தை பற்றி பேசுவதற்கு அருகதையில்லை என்று சாடினார்.
இருப்பினும், இதுவரை இம்மாநிலத்தில் ஆலயங்களுக்கு அரசாங்க நிலம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அண்மையில் 3 ஆலயங்களுக்கு நிலம் கிடைத்துள்ளதாக பேராக் மாநில இந்திய சமூகநலத்துறை மனிதவளம், சுகாதாரம் மற்றும் ஒற்றுமைத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.
மஞ்சோங் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்திற்கு 8826 சதுர அடி நிலத்தை மாநில அரசு வழங்கியுள்ளது. இந்த ஆலயம் காட்டு ஓரத்தில் இருந்து வருகிறது. இந்த நிலம் கிடைப்பதற்காக அதற்கான நில ஏற்பாடுகள் செய்யப்பட்டது காரணம் காட்டு பகுதிகளில் நிலம் கிடைக்கப்பெறுவது மிகவும் கடினமான விசயமாகும் என்று அவர் தெரிவித்தார்.
ஈப்போ குனோங் லாங் பகுதியில் சீரடி சாய்பாபா ஆலயம் நிர்மாணிக்க 4419 சதுர அடி நிலத்தை வழங்கியுள்ளது. அத்துடன், புந்தோங் ஓம் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்திற்கு 7798 சதர அடி நிலம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பேராக் மாநிலத்தில் ஆலயங்களுக்கான நிதியுதவி மற்றும் ஆலயங்களுக்கு நிலம் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு நிலத்தை பெற்று தந்துக்கொண்டிருப்பதாக சிவநேசன் மகிழ்ச்சியுடன் கூறினார்.



