Malaysia

நாட்டின் வளர்ச்சிக்கு ஒற்றுமையும் புரிந்துணர்வும் அவசியமாகும்.

 

சிலிம் ரீவர்,ஆக30- உலகின் எந்த நாடும் கொண்டிருக்காத நனிச் சிறந்த சிறப்பினை நாம் நேசிக்கும் நம் மலேசியா கொண்டுள்ளது.

அன்பும்,புரிந்துணர்வும்,ஒற்றுமையும் மேலோங்கியிருக்கும் மலேசிய திருநாடு பல்லினத்தின் ஒற்றுமையையே இந்நாட்டின் தனித்துவமாக கொண்டிருப்பதாக புக்கிட் ஜாலில் ரோட்டரி கிளாப்பின் தலைவர் குமாரி சரண்யா பெருமிதமாய் குறிப்பிட்டார்.

நம் நாடு உலக அரங்கில் சிறந்தும் உயர்ந்து நிற்பதற்கு இந்நாட்டின் பல்லின மக்களின் ஒற்றுமையே மூலதனம் என்றும் கூறிய அவர் உலகில் மலேசியாவைப் போல் அமைதியான சுபிட்சமான ஒரு நாட்டை காண்பது அரிது என்றார்.

மேலும்,மாணவர்கள் இந்நாட்டின் மீது விசுவாசமாக இருத்தல் வேண்டும்.நாட்டை நேசிக்க வேண்டும்.நாட்டின் மீது பற்றும் அன்பும் கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறிய அவர் அது மாணவ பருவத்திலேயே நம் மனங்களிலும் சிந்தையிலும் ஆழமாய் பதிய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

துரோலாக் தமிழ்ப்பள்ளிக்கு சுதந்திர நாளை முன்னிட்டு வருக புரிந்து தேசிய கொடியையும் பரிசுகளையும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்
வழங்கிய பொது இதனை சரண்யா தனதுரையில் குறிப்பிட்டார்.

மேலும்,பள்ளிகளில் மேற்கொண்ட சுதந்திர நாள் கொண்டாட்டங்களும் பேரணிகளும் குழந்தைகள் மத்தியில் தேச உணர்வையும் சுதந்திரம் பெற நம் முன்னோர்கள் செய்த அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் நன்நிலையில் எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருந்ததாகவும் தெரிவித்தார்.

முன்னதாக தத்தம் பள்ளிகளுக்கு வருகை புரிந்து தேசிய கொடியோடு பரிசுகளையும் வழங்கிய ரோட்டரி கிளாப் மற்றும் அதன் அங்கத்தினர்களுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் திரு.எடிசன் நன்றியை பதிவு செய்து கொண்டார்.

சரண்யாவுடன் அதன் செயலவையினர்களான ஏ.ஜி.சிவா,சுப்ரா,செயலாளர் பால்ராஜ்,தனபாலன் உட்பட பலர் உடன் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button