Malaysia

மருத்துவமனைகளுக்கு உதவி செய்து அர்த்தமுள்ள சுதந்திர தினத்தை கொண்டாடுவோம்.

பத்து காஜா, செப்.2: – தேசிய தினத்தை முன்னிட்டு, சமூகத்திற்கு பெரும் பங்களிக்கும் மருத்துவமனையின் நிலையை மதிப்பிடுவதற்காக பத்துகாஜா மருத்துவமனைக்கு வருகை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வருகையின் போது மருத்துவமனை பணிப்பாளர்களும், நிர்வாக உறுப்பினர்களும் அன்புடன் வரவேற்றனர் என்று மகிழ்ச்சிகரமாக கூறினார் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார்.

இந்த பயணத்தின் போது, ​​மருத்துவமனைக்கு ஐந்து யூனிட் சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன. இந்த நன்கொடையானது நோயாளிகளுக்கு சேவைகளை வழங்குவதில் மருத்துவமனையின் திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். இதன் வாயிலாக நோயாளிகளின் தேவைகள் நிறைவு செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நன்கொடை விழாவுக்குப் பிறகு, மருத்துவமனை நிர்வாகக் குழுவின் துணை இயக்குநர் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் அமர்வு நடத்தப்பட்டது. இம்மருத்துவமனை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் மற்றும் அவற்றை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தனது ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும், மேலும் இதர நடவடிக்கைக்காக மருத்துவமனையின் கோரிக்கை மனுவிற்காக காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

“பத்துகாஜா மருத்துவமனை நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இப்பகுதியில் சமூக சுகாதாரப் பராமரிப்பில் முக்கியப் பங்காற்றுகிறது. இந்த மருத்துவமனையை ஆதரிப்பது சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமல்ல, பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், சேவைகளின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தவதற்காகவும் என்றார் சிவக்குமார்.

ஆரோக்கியமான மற்றும் அதிக நெகிழ்ச்சியான சமூகத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் பல்வேறு தரப்பினரிடையே ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். பத்துககாஜாவில் ஒரு தலைவராக தனது பகுதியில் வசிப்பவர்கள் தரமான மற்றும் நிலையான சுகாதார சேவைகளை தொடர்ந்து அணுகுவதை உறுதிசெய்வதற்கு இந்த வருகையை அவர் மேற்கொண்டதாக அவர் நினுவுறுத்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button