Malaysia

சேவைக்கு கிடைத்த அங்கீகாரம் தொழிலதிபர் முகமட் சடாட் அலி டத்தோ விருது பெற்றார்

கோலாலம்பூர் செப்-1
மலாக்கா ஆளுநர் துன் ஸ்ரீ செத்திய டாக்டர் ஹாஜி முகமட் அலி ருஸ்தாம் அவர்களின் 75ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தலைநகர் செலாயாங் மற்றும் பிரிக்பீல்ல்ட்ஸ் வட்டாரத்தில் நன்கு பிரபலமான All Fresh Meat மற்றும் ஜஸ்மின் நிறுவன குழுமத்தின் இயக்குநர் முகமட் சடாட் அலி பட்ரூஸ் ஜாஹான் டத்தோ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

டத்தோ அலி நாட்டில் உள்ள பல பி40 குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி , நோன்பு பெருநாள் ,சீன பெருநாள் சமயங்களில் தனது நிறுவனம் மற்றும் சமூக இயக்கங்கள் வாயிலாக உதவிகளை செய்து வந்துள்ளார்.

மேலும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளி புத்தகப்பை, சீருடை மற்றும் நிதியுதவிகளையும் செய்து வருகிறார்.
கோவிட் -19 காலகட்டத்தில் தனது நிறுவனத்தின் வழி பல உதவிகளை வட்டார மக்களுக்கு செய்துள்ளார்.

டத்தோ அலி மிகவும் பணிவான முறையில் மக்களை நாடி உதவி வருகிறார். தன் தொழிலில் தன்னை உயர்த்திய மக்களுக்கு தான் முன்னேறிய பிறகு சில சேவைகளை செய்வதை தார்மீக கடமையாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button