
ம.இ.காவின் இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி மாநாடு கோலாலம்பூரில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது டத்தோஸ்ரீ எம்.சரவணன் மாநாட்டை நிறைவு செய்து வைத்தார்
கோலாலம்பூர், செப்.8-
மஇகாவின் இளைஞர்-மகளிர்,புத்ரா,புத்ரி மாநாடுகள் கோலாலம்பூர், ஸ்ரீ பசிஃபிக் தங்கும் விடுதில் ஒரு நாள் நிகழ்ச்சியாக எழுச்சியுடன் நடைப்பெற்றது.
இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சி, காலையில் தனித்தனியாக நடைபெற்றபின், பிற்பகலில் இவ்விரு இளையர் அமைப்புகளுடன் புத்ரா-புத்ரி பிரிவினரும் இணைந்து நான்கு அமைப்புகளும் ஒருசேரக் குழுமின.
இந்த மாநாட்டின் இரண்டாவது அங்கத்திற்கு, மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் மு. சரவணன் தலைமை தாங்கினார்.
மஇகா தேசிய உதவித் தலைவர்களில் ஒருவரான டத்தோ த.முருகையா, தேசியப் பொருளாளர் டான்ஸ்ரீ இராமசாமி, தேசிய நிருவாக செயலாளர் டத்தோ டாக்டர் ஏ.டி.குமாரசாமி ராஜா, மாநிலத் தலைவர்களான டத்தோ சைமன் ராஜா(விலாயா), டத்தோ இளங்கோ(பேராக்) வி.எஸ். மோகன்(நெகிரி), தகவல் பிரிவுத் தலைவர் இரா.தினாளன் உட்பட ஏராளமான தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.



