Malaysia

ம.இ.கா மட்டுமே ஓரிரவில் கல்விக்கு உதவும் சக்தியை கொண்டுள்ளது டத்தோஸ்ரீ எம்.சரவணன் பெருமிதம்

கோலாலம்பூர்,செப்.8-
நாட்டில் நிறைய அரசியல் கட்சிகள் இருந்தாலும் நாளைக்கே எந்தவொரு மாணவருக்காவது கல்விக் கடனோ நிதியோத் தேவைப்பட்டால் உடனே உதவும் ஆற்றல்பெற்றது 78 ஆண்டு கட்சியான மஇகாதான் என்று ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் பெருமையுடன் கூறினார்.

இந்த நாட்டில் இந்திய சமுதாயம் சார்ந்து எண்ணற்றக் கட்சிகள் இருந்தாலும் அதுகுறித்து மஇகா பொருட்படுத்தவில்லை. அதேவேளை மஇகா எதிர்பார்ப்பதெல்லாம், மஇகாவை மற்றக் கட்சிகள் வெறுமனே விமர்சிப்பதைக் காட்டிலும் மஇகா உருவாக்கியதைப் போல இன்னொரு உயர்க்கல்வி நிறுவனத்தைக் கட்டமைக்க முனைப்புகாட்ட வேண்டும்.

அதைப்போல, நம் மாணவ சமுதாயத்தின் கல்வி மறுமலர்ச்சியை இலக்காகக் கொண்டு இயங்கும் மஇகாவின் கல்விக் கரமான எம்.ஐ.இ. டி.யைப் போல இன்னோர் அமைப்பை உருவாக்குவதன்மூலம் மஇகாவிற்கு சவால் விட்டால், அதனால் இந்திய சமுதாயம் மேலும் பயனையும் என்று டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button