Malaysia

இந்திய மாணவர்களுக்கான மெடிரிகுலேஷன் வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் இளைஞர்,மகளிர்,புத்ரா,பத்ரி மாநாட்டில் வலியுறுத்து

தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

கோலாலம்பூர், செப்.8-
கோலாலம்பூரில் ம.இ.காவின் இளைஞர், மகளிர்,புத்ரா மற்றும் புத்ரி மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி மாலை வரை நடைபெற்ற இம்மாநாட்டை ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் முடித்து வைத்தார்.

இந்த மாநாட்டில் இளைஞர்கள் அனைவரும் கல்வி, சமூகம் குறித்து தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
புத்ரா பிரிவு தலைவர் டாக்டர் சதீஷ் குமார், புத்ரி பிரிவுத் தலைவி திருமதி தீபா சோலைமலை, மகளிர் தலைவி சரஸ்வதி நல்லதம்பி, இளைஞர் பிரிவு தலைவர் கி.அரவிந்த் ஆகியோர் பேசினர்.

நீண்ட காலம் சேவையாற்றும் மகளிருக்கு தேசியத் தலைமை அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று ந.சரஸ்வதி கோரிக்கை ஒன்றை வைத்தார்.

இந்நிலையில் 2024 கல்வி ஆண்டில் இந்திய மாணவர்களுக்கான மெட்டிரிகுலேஷன் வாய்ப்பு மிகவும் குறைவாகக் கிடைத்துள்ளதால் அதனை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை சரஸ்வதி சுட்டிக் காட்டினார். கல்வி தொடர்பான பல விஷயங்கள் குறித்து Dr சதிஷ்குமார் பேசினார்.

இந்த மாநாட்டில் ம.இ.கா பொருளாளர் தான்ஸ்ரீ ராமசாமி, தலைமைச்செயலாளர் டத்தோ Dr ஆனந்தன், டத்தோ தினகரன், டத்தோ முருகையா, மஇகா மத்திய செயலவை உறுப்பினர்கள், சபா மாநில மகளிர்த் தலைவி க.கமலேசுவரி, அவர்தம் தலைமையிலான குழுவினர் உட்பட, 1,200-க்கும் மேற்பட்டோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button