Malaysia

ஆறு ஐரோப்பிய நாடுகளுக்கு இன்ப சுற்றுலா

ஈப்போ, ஏப்.9- பேராக் மாநிலத்தை சேர்ந்த 43 பேர் அடங்கிய குழுவினர் ஐரோப்பாவிலுள்ள ஆறு நாடுகளுக்கு இரண்டு வார சுற்றுலா பயணத்தை மேற்கொள்வதாக மீனாட்சி திரவல் துவர் ஏஜென்சியின் நிறுவனரும், இக்குழுவின் சுற்றுலாத் தலைவருமாகிய லோகநாதன் நாகப்பன் கூறினார்.

இம்முறை இந்த சுற்றுலாவில் லண்டனில் தரையிறங்கிய பின் அங்கு இரு நாட்களில் சுற்றுலா மேற்கொள்ளப்படும். அதன் பின் கடல் பயணம் மேற்கொண்டு நெதர்லந்துவை வந்தடைவார்கள். அதன் பின், சுவிட்ஸ்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் இறுதியாக ஜெர்மனியை வந்தடைவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த சுற்றுலா பயணிகள் குறைந்தபட்சம் ஒரு நாட்டில் இரு நாட்கள் இருந்து அங்குள்ள இயற்கை காட்சிகள் மற்றும் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை கண்டறிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இருப்பினும், கோலாலம்பூர் லண்டன் பயணித்தின் மற்றும் வரும் பொழுது குறைந்தபட்சம் நான்கு மணி நேரம் டுபாயில் விமான நிலையத்தில் ஓய்வெடுக்க வாய்ப்புள்ளது என்று அவர் கோடிக்காட்டினார்.
இந்த சுற்றுப்பயணத்தில் அனைவருக்கும் காலையுணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவை ஏற்பாட்டுக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கு யாரும் கட்டணம் செலுத்த அவசியமில்லை என்று அவர் கருத்துரைத்தார்.

நம்மை ஆண்டவர்களை லண்டனில் காணும் பொழுது சாதரண மனிதர்களாக அவர்கள் தோன்றுவார்கள். துரையாக இருந்தவர்கள் சாதாரணமாக தோன்றுவார்கள். ஆகவே, மனிதர்களுடையே சமத்துவம் மற்றும் மதிப்பளிக்கும் பண்பு இத்தகைய சுற்றுலா பயணத்தின் வாயிலாக கண்டறியலாம் என்று அவர் தம் கருத்தை பதிவு செய்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button