Malaysia

துன் சாமிவேலு மறைந்த பின்பும் அவரை இத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறார்கள் ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் நெகிழ்ச்சி

கோலாலம்பூர், மார்ச் 10-

துன் சாமிவேலு மறைந்த பின்பும் அவரை இத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பது நெகிழ்ச்சியாக உள்ளது என்று ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறினார்.

இந்திய சமுதாயத்திற்கான துன் சாமிவேலுவின் சேவைகளையும் தியாகங்களை யாரும் மறுக்க இயலாது என்று துன் சாமிவேலுவின் 88ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மஇகா நேதாஜி மண்டபத்தில்்நடைபெற்ற அவரின் நினைவலைகள் கொண்டாடத்தில் உரையாற்றிய போது டத்தோஶ்ரீ எம். சரவணன் அவ்வாறு தெரிவித்தார்.

வேலை நாளில் அரங்கம் நிறைந்த கூட்டத்தைப் பார்க்கும் போது நெகிழ்ச்சியாக உள்ளது. போற்றினாலும் தூற்றினாலும் இந்திய சமுதாயத்திற்கான துன் சாமிவேலுவின் சேவைகளையும் தியாகங்களையும் யாராலும் மறக்க முடியாது. மறுக்க இயலாது என்று டத்தோஸ்ரீ சரவணன் சொன்னார்.

கடந்த காலங்களில் ஒருவரின் சேவைகளையும் குணத்தையும் வைத்துத்தான் ஒருவர் நல்லவரா கெட்டவரா என மதிப்பிடுவார்கள். ஆனால் இப்போது டிக் டோக் சமூக ஊடகங்களை வைத்துத்தான் எல்லாம் முடிவு செய்யப்படுகிறது என்றார் டத்தோஸ்ரீ சரவணன்.

இந்நிலை மாற வேண்டும். ஒருவர் ஆற்றும் சேவைக்கு உரிய அங்கீகாரம் வாழும் போதே அவருக்கு வழங்கப்பட வேண்டும். அவ்வகையில் துன் சாமிவேலு மறைந்தாலும் அவரின் சாதனைகள் இன்னும் அனைவராலும் போற்றப்படுகிறது. இதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது என்று டத்தோஶ்ரீ சரவணன் கூறினார்.

துன் சாமிவேலுவின் நினைவேந்தல் நிகழ்வில் மஇகா உதவித் தலைவர்கள் டத்தோ டி. மோகன், டத்தோ முருகையா, டத்தோ அசோஜன், செயலாளர் ஆர்டி ராஜா, பொருளாளர் டான்ஶ்ரீ ராமசாமி, ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஶ்ரீ நடராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button