
தேசிய முன்னணியில் மக்கள் சக்தி கட்சி பேச்சு வார்த்தை நடத்தப்படும் டத்தோஸ்ரீ ஸம்ரி அறிவிப்பு
கோலாலம்பூர் செப் 29-
மக்கள் சக்தி கட்சிக்கு செனட்டர் பதவி வழங்க கோரி தேசிய முன்னணியிடம் கோரிக்கை முன் வைக்கப்படும் என்று தேசிய முன்னணி செயலாளர் டத்தோஸ்ரீ ஸம்ரி அறிவித்துள்ளார்.
அதே சமயம்
மக்கள் சக்தி கட்சி தொடங்கப்பட்டது முதல் இதுநாள் வரை தேசிய முன்னணியுடன் செயல்பட்டு வருகிறது. அவர்களின் விசுவாசத்திற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் என மக்கள் சக்தி கட்சியின் 16ஆவது மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த போது டத்தோஸ்ரீ ஸம்ரி அவ்வாறு தெரிவித்தார்.

தேசிய முன்னணியில் உறுப்புக்கட்சியாக மக்கள் சக்தியை இணைப்பது தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.
மக்கள் சக்தி கட்சியின் தேசிய பேராளர் மாநாடு மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய முன்னணி தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



