
இந்திய சமுதாயத்திற்கு தீபாவளிக்கு 15 லட்சம் பரிசுக்கூடைகள் போதுமா? அதிகரிக்க டத்தோ டாக்டர் லோகபாலா கோரிக்பை
கோலாலம்பூர் அக் 4-
மடானி அரசாங்கம் மூலம் தீபாவளிக்கு 15 லட்சம் பரிசுக்கூடைகள் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவிப்பு செய்துள்ளார்.
இந்த 15 லட்சம் பரிசுக்கூடைகள் போதாது. இது பல மடங்காக அதிகரிக்க வேண்டும் என்று மைபிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.
இந்த நாட்டில் பொருளாதரத்தில் பின் தங்கிய சமுதாயமாக இந்திய சமுதாயம் உள்ளது.கண்டிப்பாக இந்திய சமுதாயத்திற்கு அதிக உதவிகள் தேவை. ஆகவே தீபாவளிக்கு 15 லட்சம் பரிசு கூடைகள் என்பது மிகவும் குறைவு.
இதை பல மடங்காக அதிகரிக்கும்படி அரசாங்கத்தை மைபிபிபி கட்சி கேட்டுக் கொள்கிறது என்று அவர் சொன்னார்.
அண்மையில் பிரதமர் அவர்கள் தீபாவளிக்கு 15 லட்சம் பரிசுக் கூடைகள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இன்று மைபிபிபி கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போது டத்தோ டாக்டர் லோகபாலா இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



