Malaysia

ஈப்போ பொது மருத்துவமனை எதிரே பிரதான சாலையில் வாகனம் நிறுத்தினால் போலிஸ் சம்மன் வெளியிடாது

தேசம் செய்திகள் சாரா

ஈப்போ, அக்.5-
ஈப்போ ராஜா பெர்மாய்சுரி பைனுன் மருத்துவமனை எதிரே ஜாலான் ராஜா அஸ்மான் ஷா பிரதான சாலை ஓரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போலிஸ் துறை சம்மன் வெளியாக்காது என பேராக் போலிஸ் தலைவர் டத்தோ அசிஷி மாட் ஹாரிஸ் உறுதி கொடுத்தார்.

பேராக் ஆட்சி மன்ற உறுப்பினர் சிவ நேசன் அச்சலிங்கம்
அவர்களுடன் நடந்தப்பட்ட
கூட்டத்தில் எடுத்த முடிவிற்க்கு இணங்கி 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தளர்வு கொடுக்கப்பட்டது என அவர் சுட்டிக்காட்டினார்.

மருத்துவமனையில் குறைவான வாகனம் நிறுத்துமிடம் இருக்க வாகனம் நிறுத்த இடமில்லாமல்
இருக்கும் நிலை ஏற்ப்பட இந்த மேற்க்கண்ட தளர்வு கொடுக்கப்பட்டது என்றார்.

கிரின் டவூன் அரசாங்க கிளினிக்
அருகில் புதிய மருத்துவமனை உருவாக்க இருப்பதாலும் தற்காலிக.வேலோட் ரோம் வளாக வாகன நிறுத்துமிடம் தூரத்தில் இருப்பதால்
வாகனம் நிறுத்துமிட பிரச்னை எழுந்தது என்றார்.

இந்த தளர்வு தரப்பட வாகன.நெரிச்சல் உண்டு பண்ணும் அளவிற்கு வாகனத்தை நிறுத்த வேண்டாம் என அவர் அறிவுறுத்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button