
இனி பேராக் எப்.சி யின் காற்பந்தாட்டம் மஞ்சோங்கில் நடைபெறும்
ஈப்போ, அக்.10- இனிவரும் காலங்களில் அடுத்த வாரம் 19.10.2024 முதல் பேராக் எப்.சி. காற்பந்து விளையாட்டுகள் மஞ்சோங் ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று பேராக் எப் சி யின் நிர்வாகி கூறினார்.
ஈப்போவிலுள்ள ஸ்டேடியம் பேராக்கில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கவுள்ளதால் இனிவரும் காலங்களில் அனைத்து பேராக் எப்.சி விளையாட்டுகள் மஞ்சோங்கில் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்தாகி விட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த மஞ்சோங் ஸ்டேடியம் 14 ஆயிரம் காற்பந்து இரசிகர்கள் அமரும் இருக்கைகள் கொண்டுள்ளன. ஆகையால், இரசிகர்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் இருக்காது. அதிகமான உள்ளுர் காற்பந்து இரசிகர்கள் இம்முறை இந்த ஸ்டேடியத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
மஞ்சோங் மாவட்ட போலீஸ்படை தலைவர் ஹஸ்புல்லா நிறைவான உதவிகள் வழங்க முன்வந்துள்ளார். இரசிகர்கள் மற்றும் விளையாட்டாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமையும் முக்கியதுவமும் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.



