
Malaysia
ஈப்போ மருத்துவமனை எதிரே இரு புறத்தில் கார் நிறுத்தம் போலிஸ் சம்மன்களை வெளியிடாது
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, அக்.10-
ஈப்போ ராஜா பெரம்புவான் மஸ்வீன் மருத்துவமனை எதிரே பிரதான சாலை இரு புரம் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களுக்கு
போலிஸ் துறை சம்மன்கள் வெளியாக்காது
என உத்தரவாதம் கொடுக்கப்பட்டது.
மருத்துவமனையில் கார் நிறுத்தும் இடம் போதாது எனும் நிலை இருக்க வாகன உரிமையாளர்கள்
பிரதான சாலையின்
இரு புறம் கார் நிறுத்தி வைக்க
போக்குவரத்து நெரிச்சல் ஏற்ப்பட்டு
வரும் சாத்தியத்தை அவர் நிராகரிக்கவில்லை என ஈப்போ மாவட்ட போலிஸ் உதவி ஆணையர் அபாங் சைனால் அபிடின் அபாங் அமாட் சொன்னார்.
எனினும், மருத்துவமனை எதிரே இருக்கக் கூடிய இரு வழி சாலை பகுதி பேருந்து வந்தடையும் பேருந்து நிலையம் வளாகத்தில் வாகனம் நிறுத்தி இடையூறு ஏற்ப்படித்தினால் அதற்கு போலிஸ் சம்மன் வெளியாக்கும் என்றார்.



